

பொதுவாகவே எழுத்தாளர்கள், கலைஞர் என்றாலே வினோதமாக தான் இருப்பார்கள். அப்படி உலகம் முழுக்க வினோதமாக இருந்த சில எழுத்தாளர்கள் இவர்கள்...
எட்வர்ட் ஹெமிங் வே :
அமெரிக்க எழுத்தாளரான இவர் வேட்டை பிரியர். நகரத்துக்குள் படுத்திருந்தாலும் படுக்கைக்கு அருகில் லோட் செய்த வேட்டை துப்பாக்கி தயாராக இருக்கும்.
அப்டி எழுதினால், அதைக் கிழித்து விடுவாராம். படிச்சுக் கிழிக்கிறது தெரியும்.. இவரென்ன எழுதி கிழிக்கிறார்?
ஜான் சீவர்:
அமெரிக்கா ஆண்டன் செக்காவ் என்றழைக்கப்படுபவர் ஜான் சீவர். நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர். இறப்பதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு தான் ஓர் உண்மையை சொன்னார். எல்லா படைப்புகளையும் நிர்வாணமாக அமர்ந்தபடியேதான் எழுதினாராம்.
பிரான்சின் பிரோஸ்:
நிற தேவதை என்னும் நாவலுக்காக அமெரிக்காவின் உயரிய விருதான நேஷனல் புக் அவார்டு விருதைப் பெற்றார். அமெரிக்க எழுத்தாளர் சங்கத் தலைவியாக நீண்டகாலம் இருந்தவர்.
அதெல்லாம் சரி ராத்திரிதான் எழுதுவாராம். அதுவும் எழுதும்போது கணவரின் இரவு உடையை அணிந்து தான் எழுதுவாராம். அப்ப அவரு இவங்க ட்ரெஸ்ஸ போட்டுக்குவாங்களானு எல்லாம் கேக்கக் கூடாது.
சார்லஸ் புக்கோவ்ஸ்கி:
கொண்டாட்டம் என்றால் நினைவிற்கு வரும் அமெரிக்க கவிஞர். மைக் முன் பேச வரும்போதே ஒரு கையில் மதுவும் ஒரு கையில் சிகரெட்டோடும் வந்து அதகளம் செய்பவர். எழுதியதில் கிடைக்கும் ராயல்டியை வைத்து சரக்கடிப்பது. காசு தீர்ந்தவுடன் அதே பாரில் வேலைக்கு சேர்வது என அட்டகாசம் செய்திருக்கிறார்.