ஸ்பைஸ்ஜெட்டுக்கு என்னதான் ஆச்சு?

ஸ்பைஸ்ஜெட்டோட சில விமானங்கள் பறக்கும்போது புகை வர்றது, தீப்பிடிச்சு எறியிறது, எஞ்சின் ஆயில் லீக் ஆகுறதுனு விதவிதமான கோளாறுல சிக்கி பயணிகளைப் பதற விட்டிருக்கு.
ஸ்பைஸ்ஜெட்டுக்கு என்னதான் ஆச்சு?
Published on

ஸ்பைஸ் ஜெட்டுக்கு என்னதான் ஆச்சுனு கேட்க வேண்டிய சூழ்நிலைதான் இப்போ இருக்கு. ஏன்னா சமீபத்துல அவங்களோட சில விமானங்கள் பறக்கும்போது புகை வர்றது, தீப்பிடிச்சு எறியிறது, எஞ்சின் ஆயில் லீக் ஆகுறதுனு விதவிதமான கோளாறுல சிக்கி பயணிகளைப் பதற விட்டிருக்கு.

டெல்லில இருந்து ஜபல்பூருக்கு பறந்த ஸ்பைஸ் ஜெட்ல திடீர்னு நடுவானத்துல போகும்போது புகை வந்திருக்கு கலவரமான பைலட் திரும்ப டெல்லிக்கே யூடர்ன் போட்டு வந்திருக்கார்.

மதுரைல இருந்து 161 பேரோட துபாய் போக ஒரு ஸ்பைஸ் ஜெட் தயாரா இருந்திருக்கு. கடைசி நேரத்துல விமானத்துல தொழில்நுட்ப கோளாறு இருந்ததைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

அப்பறம் 6 மணிநேரம் அதை ரிப்பேர் பார்த்து கிளப்பிட்டு போயிருக்காங்க. பாட்னாவில இருந்து டெல்லிக்கு 185 பேரோட பறந்த ஸ்பைஸ் ஜெட் திடீர்னு தீப்பிடிக்க அவசரமா தரையிறங்கி எல்லாரையும் காப்பாத்தியிருக்காங்க.

மத்தியபிரதேசத்தில் இருந்து ஜபல்பூருக்கு பறந்த ஒரு ஸ்பைஸ்ஜெட்ல எஞ்சின் ஆயில் கசிய அதையும் தரையிறக்கியிருக்காங்க.

விமான நுழைவாயில் கதவுல திடீர்னு எச்சரிக்கை மணி அடிக்க அது என்ன ஏதுன்னு பார்க்க ரெண்டு ஸ்பைஸ்ஜெட் சேவையை ரத்து பண்ணிருக்காங்க.

இப்படி தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டுக்கு நேரம் சரியில்லாம இருக்கு. 'என்னது ஸ்பைஸ்ஜெட் பிரச்சனை தீர பாடிகாட் முனீஸ்வரனுக்குப் பூஜை போடணும்னு அர்ஜுன் சம்பத் போராட்டமா?'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com