காதல்னு ஒன்னு இல்லைனா? - என்னென்ன நடந்திருக்கும்?

ஒருவேளை காதல் இந்த உலகத்திலேயே இல்லாமப் போயிருந்தா, என்னென்ன ஆயிருக்கும்னு ஒரு சின்ன கற்பனைதான். பயப்புடாதீங்க, கற்பனைதான்...
காதல்னு ஒன்னு இல்லைனா
காதல்னு ஒன்னு இல்லைனாகாதல்னு ஒன்னு இல்லைனா
Published on

ஒருவேளை காதல் இந்த உலகத்திலேயே இல்லாமப் போயிருந்தா, என்னென்ன ஆயிருக்கும்னு ஒரு சின்ன கற்பனைதான். பயப்புடாதீங்க, கற்பனைதான்...

திருவள்ளுவர் காமத்துப்பால் எழுதாமலேயே விட்டிருப்பார். எங்க அக்கா மகளே இந்துனு லெட்டர் எழுதாம, ‘காதலித்துப் பார் எறும்பு இரும்பாகும்; இரும்பு துரும்பாகும்’னு கவிதை எழுதாம பேப்பர் பேனாவெல்லாம் மிச்சமாகியிருக்கும்.

காதல்னு ஒன்னு இல்லைனா
காதல்னு ஒன்னு இல்லைனாகாதல்னு ஒன்னு இல்லைனா

கனகாம்பரம், மல்லிகை, சாமந்தி மாதிரி ரோஜாப்பூவும் எதையும் குறிக்காம சாதாரணமான பூவா மட்டும் இருந்திருக்கும்.

ஒரு பொண்ணுக்காக நாலு பேர் அடிச்சிக்கறது, காதலை மறுத்ததினால் முகத்தில் ஆசிட் அடிக்கிறது இந்த மாதிரி வன்முறைகள் அறவேஇருந்திருக்காது.

பினாயில், ஆசிட் கக்கூஸ் கழுவ மட்டும் யூஸ் பண்ணப்பட்டிருக்கும், பூச்சிமருந்து வயல்ல மட்டும் தெளிக்கப்பட்டிருக்கும். ‘செருப்பு பிஞ்சிடும்’, ‘பொறுக்கி நாயே ’, ‘ நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல?’ இந்த வார்த்தைகள் எல்லாம் பொண்ணுங்க வாயில இருந்து அடிக்கடி வராம இருந்திருக்கும்.

காதல்னு ஒன்னு இல்லைனா
காதல்னு ஒன்னு இல்லைனாகாதல்னு ஒன்னு இல்லைனா

கிஃப்ட் ஷாப், கிரீட்டிங் கார்டு ஷாப்பெல்லாம் திண்டுக்கல் பூட்டோட மூடியே இருக்கும். தாஜ்மஹால்னு ஒண்ணு கட்டப்பட்டிருக்காது.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com