இப்போலாம் நிறைய பேரு ஆன்லைன்ல scam பண்ணி சம்பாதிக்கலாம் அப்டிங்கற ஐடியால இருக்காங்க. விதவிதமா scam பண்றாங்க. வேலை கொடுக்கிறேன்! காசு கொடுக்கிறேன்! பொருள் வாங்கிக்கோ! பணம் சம்பாதி! அப்படி இப்படின்னு விளம்பரப்படுத்தி Scamming-அ அவங்களுடைய முழு நேர வேலையா வச்சிருக்காங்க சில பேரு. இவங்கதான் Scammers.
Whatsapp மூலமா வேலை இருக்குன்னு வந்த Scammer கிட்ட ஒரு உருட்டு உருட்டி, அதுக்கு அந்த scammer பண்ண ரிப்ளைய ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டர்ல பதிவிட்டு இருக்காங்க கஜோல். இந்த பதிவு ட்விட்டர்ல ட்ரெண்டிங். Scammer கிட்ட இருந்து, கஜோல் எப்படி தந்திரமா தப்பிச்சாங்கன்றத பாக்கலாம்.
ஒருத்தர் கஜோல்ன்ற பெண்ணுக்கு whatsapp மூலமா, "ஒரு கம்பெனில வேலை இருக்கு, இந்த வேலையில ஜாயின் பண்ணுங்க"னு நூதன முறையில Scam பண்ண ஆரம்பிச்சிருக்காரு. ஆனா கஜோல் ரொம்ப விவரமா, இவரு scammerனு தெரிஞ்சுக்கிட்டு, எனக்கு வாழவே பிடிக்கலனு ஒரு உருட்டு உருட்டியிருக்காங்க.
அவங்களோட Chatல என்ன இருந்திச்சினு பாக்கலாம். Scammer கஜோலோட whatsapp எண்ணுக்கு என்ன பண்றீங்கனு கேக்க. கஜோல், "என்ன நானே கொலை பண்ண முயற்சிச்சிட்டு இருக்கேன்"னு சொல்ல. "ஜோக் காட்டுறியா நீ" அப்படின்ற மாதிரி அந்த Scammer ரிப்ளை பண்ணிட்டு. கஜோல் கிட்ட அந்த வேலைய பத்தி சொல்ல ஆரம்பிச்சார். கூடவே எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா இந்த வேலைய பத்தி சொல்றேன்னு அவகாசம் கேட்டிருக்காரு. கஜோல் அதுக்கு, "நான் என்ன கொலை பண்றதுல பிசியா இருக்கேன்"னு சொல்லியிருக்காங்க. அப்ப கூட அசராத அந்த scammer எனக்கு ஒரு 5 நிமிடம் குடுங்கனு கேக்க, அதுக்கு கஜோல், "எனக்கு இது எல்லாத்தையும் விட சாகுறது தான் முக்கியம்"னு சொல்லியிருக்காங்க.
விடுவனா நானு.. Scammer அவங்களுடைய வேலைய பத்தி சொல்ல....உடனே கஜோல் "இன்னிக்கு நைட் நான் செத்துட்டேனா அந்த காசு வச்சி நான் என்ன பண்ணுவேன்"னு கேட்டு இருக்காங்க. என்ன நினைச்சாரோ தெரியல, மனித வாழ்வு ரொம்ப முக்கியமானது. அதை நீங்க சூசைட் பண்ணி எல்லாம் கெடுக்க கூடாது. ஒரே தத்துவம் மழையா பொழிஞ்சி இருக்காரு அந்த Scammer. அதுக்கு கஜோல் "நான் வாழ்றதுக்கு தகுதியே இல்லைன்னு நினைக்கிறேன்"னு உருட்டியிருக்காங்க.
"நீங்க உங்களுக்காக வாழனும்"னு அட்வைஸ் பண்ணியிருக்காரு அந்த Scammer. கஜோல், "எனக்கு என்னையே பிடிக்கல"னு ரிப்ளை பண்ணியிருக்காங்க. Scammer, "எதுக்கு? ஏன்?னு கேள்வி கேக்க. கஜோல் ரிப்ளை பண்ணாததால ஷாக் ஆன Scammer, "Are you there ?" அப்படின்னு கேட்டு இருக்காரு.
அடுத்து தான் சம்பவமே !! மறுநாள் கஜோல் WhatsAppல அந்த Scammer கிட்ட "நா அவங்க அம்மா பேசுறேன். கஜோல் இறந்துட்டா"னு மெசேஜ் அனுப்பி இருக்காங்க. அந்த மெசேஜ்-அ பாத்துட்டு அந்த Scammer என்ன ஆனாரோ தெரியல.
இப்படி விதவிதமா Scamming பண்றவங்க நம்மள சுத்தி நிறைய பேரு இருக்காங்க. இவங்க கிட்டயிருந்துலாம் தப்பிக்கணும்னா தந்திரமாவும் உஷாராவும் இருக்குறது தான் வழி. கஜோல் இதுக்கு நல்ல எடுத்துக்காட்டு.