Wind-Powered Cargo Ship: ``காற்றுக்கு HI! இனி டீசலுக்கு BYE! - இப்படி ஒரு கப்பலா?''

நாம் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்களைப் பார்த்திருப்போம்.இந்த சிறிய அளவிலான 'பாய்மர' நுட்பம்தான் இன்று காற்றைக் கொண்டு இயங்கும் முதல் சரக்குக்கப்பலை இயக்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?
Wind-powered cargo ship
Wind-powered cargo ship Timepass
Published on

ஆம்...'பிக்ஸிஸ் ஓஷன்' (pyxis ocean) எனப் பெயரிடப்பட்டிருக்கிற  கப்பல்தான் உலகின் முதல் காற்றை கொண்டு இயங்கும் சரக்குக் கப்பலாகும். இந்தக் கப்பல் தன்னுடைய முதல் சோதனை ஓட்டத்தைச் சீனா முதல் பிரேசில் வரை நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறது. மேலும் இக்கப்பல் 81 ஆயிரம் டன் எடை கொண்ட  சரக்குகளைச் சுமக்கக்கூடியது.

அமெரிக்கக் கப்பல் நிறுவனமான கார்கில் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இக்கப்பல் புதுமையான காற்று இறக்கைகளை கொண்டிருக்கிறது. கப்பலில் அமைக்கப்பட்ட இயக்கு பாய் மரங்கள் 37.5 மீட்டர் அதாவது 123 அடி உயரம் கொண்டது. கப்பலின் எரிபொருளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக விண்ட்விங்ஸ்(windwings) எனப்படுகிற பாய் மரங்கள் ஸ்டீல் மற்றும் ஃபைபர் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த உயரமான இயக்கு பாய் மரங்கள் இங்கிலாந்தில் உள்ள பிரபல பார் டெக்னாலஜிஜ்(BAR TECHNOLOGIES) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு 'யாரா மெரைன் டெக்னாலஜிஸ்' (Yara Marine Technologies) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிக்சிஸ் ஓஷன் சரக்குக் கப்பல் 229 மீட்டர் நீளமும், 43 ஆயிரம் டன்களுக்கு மேல் எடையும் கொண்டது.  முதன் முதலில் 'Formula One of the Seas' எனப்படும் அமெரிக்கக்  கப்பல் போட்டிக்காக, சர் பென் ஜன்ஸ்லியின் குழுவால் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

எரிபொருள் சேமிப்புக்கும் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசடையாமல் இருக்க கார்பன் அளவை குறைப்பதற்கும் இக்கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம்  இயக்கப்படும் கப்பல்  வெளியேற்றும் கார்பன் அளவு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் போன்ற எரிபொருளைக் கொண்டு கப்பல்களை இயக்காமல் காற்றின் மூலம் இயக்கப்படுவதால் வெளியேறும் கார்பன் அளவு 30 சதவீதம் குறையலாம்.

கப்பல் போக்குவரத்துத் துறை கார்பன் அற்ற பசுமை பயணத்தை நோக்கிக் காத்திருக்கிறது.வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் பெருமளவு கட்டுமான கப்பல்கள் காற்றில் இத்தொழில்நுட்பம் மூலம் இயங்கும். 2030-ல் 20% மற்றும் 2050-ல் 70% கப்பலுக்கான எரிபொருள் தேவை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சி.ஹரிஹரன் 

Wind-powered cargo ship
TITANIC house: 13 வருடங்களாய் 'டைட்டானிக் கப்பல்' வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் விவசாயி!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com