பெண்கள் பிரிமியர் லீக் (WPL) முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 448 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏலம் விடப்பட்ட வீரர்களின் விவரம்:
ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி
சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம்
எலிஸ் பெர்ரி(AUS) – ரூ. 1.7 கோடி
ரேணுகா சிங் - ரூ. 1.5 கோடி
ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி
எரின் பர்ன்ஸ் (AUS) – ரூ. 30 லட்சம்
திஷா கசட் - ரூ. 10 லட்சம்
இந்திராணி ராய் - ரூ. 10 லட்சம்
ஸ்ரேயங்கா பாட்டீல் – ரூ. 10 லட்சம்
கனிகா அஹுஜா - ரூ. 35 லட்சம்
ஆஷா ஷோபனா – ரூ. 10 லட்சம்
ஹீதர் நைட் - ரூ. 40 லட்சம்
டேன் வான் நீகெர்க் - ரூ. 30லட்சம்
ப்ரீத்தி போஸ் - ரூ. 30லட்சம்
பூனம் கெம்னார் – ரூ. 10லட்சம்
கோமல் சன்சாத் - ரூ. 25லட்சம்
ஸ்மிருதி மந்தானா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதாகும் இடது கை நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 2013இல் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 112 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 2651 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய பெண்கள் தேசிய அணிக்காக விளையாடும் ஸ்மிருதி மந்தானா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 2018 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐயின் விருதுகளில் சிறந்த மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதை வழங்கியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டிசம்பர் 2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரருக்கான Rachael Heyhoe-Flint விருதை வழங்கியது.
30 டிசம்பர் 2021 அன்று, அவர் ICC மகளிர் T20 ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டார்.
ஜனவரி 2022 இல் சிறந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹெய்ஹோ-ஃபிளிண்ட் விருதை ஸ்மிருதி மந்தானாவுக்கு வழங்கியது .
ஜூலை 2022 இல், இந்திய மகளிர் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.