பிரெண்ட்ஸ் படத்தில் வரும் உங்க எல்லாரையும் நம்பி வந்ததுக்கு, என் புத்திய செருப்பாளையே அடிக்கணும்டா... என்ற வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கேற்ப.. தற்போது ஒரு சம்பவம் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சனிக்கிழமையன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி போராடி தோல்வியடைந்தது. இந்த நிலையில் வங்காளதேச அணியின் மோசமான ஆட்டத்தால் மனமுடைந்த ரசிகர் ஒருவர் தன்னைத்தானே ஷூவால் அடித்துக் கொண்டார்.
ஆட்டத்தின் முடிவில் பேசிய கேப்டன் ஷாகிப், தோல்விக்கு முதல் காரணம் அணியின் பேட்ஸ்மேன் என்று குற்றம் சாட்டினார். "நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். நெதர்லாந்தை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் நாங்கள் பேட்டிங்கில் மிகவும் மோசமாக செய்தோம். வங்காளதேச அணியை ரசிகர்கள் பெரிதும் ஆதரவளித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
- மு.குபேரன்.