"தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை"னு வாரத்துல அஞ்சு நாள் வேலை செஞ்சிட்டு இருந்த ஊழியர்களுக்கு, ஒரு நாள் தூங்குங்க ஐயானு பெங்களூர்ல ஒரு நிறுவனம் லீவ் கொடுத்து இருக்கு !!
மார்ச் 17 உலக தூக்க தினத்தை கொண்டாடுற வகையில, பெங்களூர்ல ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிச்சிருக்கு.
வேக்ஃபிட் சோல்யூஷன்ஸ், ஹோம் அண்ட் ஸ்லீப் தீர்வுகள் நிறுவனம் லிங்க்ட்யின் (LinkedIn) தளத்துல தன்னுடைய ஊழியர்களுக்கு தூக்க தினத்தை கொண்டாடுற வகையில, தூங்குங்க அப்படின்னு ஒரு நாள் விடுமுறைய அறிவிச்சிருக்காங்க.
அதுவும் இந்த லீவ் வெள்ளிக்கிழமை வந்திருக்கு. வெள்ளி, சனி, ஞாயிறுனு மூணு நாள் நிம்மதியா தூங்கு என்ஜாய் பண்ணுங்க மாப்பினு சொல்ற மாதிரி ஒரு அறிவிப்பை இந்த தளத்துல வெளியிட்டு இருக்கு வேக்ஃபிட் சோல்யூஷன்ஸ் நிறுவனம்.
அது மட்டும் இல்லாம, ஊழியர்களுக்கு இந்த நிறுவனம் அனுப்புன ஈமெயிலையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவா போட்டு இருக்காங்க. அந்த ஈமெயில் என்ன சொல்லி இருக்குன்னா ; சர்ப்ரைஸ் லீவ் ! தூக்கம்ன்ற பரிசை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க !! வேக்ஃபிட் சோல்யூஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த சர்ப்ரைஸ் லீவ, தூக்க தினத்தை கொண்டாடுற வகையில ரொம்பவே சந்தோஷம் அடையுது. தூக்க ஆர்வலர்களான நாங்க, தூக்க நாளை ஒரு திருவிழாவாக கருதுறோம், குறிப்பாக வெள்ளிக்கிழமையில வரும் போது அது இன்னும் பெரிய திருவிழானு அந்த ஈமெயில்ல சொல்லி இருக்காங்க.
இப்படியே தூங்குறதுக்காக லீவ் விடுற இந்த மாதிரியான கம்பெனில எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்.. சரி தூக்க தினத்தில தூங்குறதுக்கு லீவ் கொடுத்துட்டீங்க.. உணவு தினத்தில உணவு கொடுப்பீங்களா என்ன ??
தூக்க தினத்தில லீவு கிடைக்காமல் ஆஃபீஸ்க்கு போனவங்களுடைய நிலைமை நெனச்சா கஷ்டமா தான் இருக்கு !!
- நெ.ராதிகா