ஸ்பெயினின், அஸ்டூரியாஸ் மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூர் சீஸ் திருவிழாவில் நடந்த ஏலத்தில் 2.2 கிலோ எடையுள்ள கேப்ரேல்ஸ் ப்ளூ சீஸ் €30,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹27 லட்சம்)க்கு விற்கப்பட்டதால் உலகின் விலை உயர்ந்த சீஸ் என்ற பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்த சீஸ்சை அஸ்டூரியாஸில் உள்ள எல் லாகர் டி கொலோட்டோவைச் சேர்ந்த உணவக உரிமையாளர் இவான் சுரேஸ்க்கு விற்கப்பட்டது. மேலும், இதுகுறித்து சுரேஸ் கூறுகையில், "அற்புதமான இந்த சீஸ்ஸும் இந்த சீஸ்ஸைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் திறமையும்தான் என்னை வாங்க வைத்தது" என்று கூறியுள்ளார்.
ஆமா..! இவ்வளவு விலையுயர்ந்த சீஸ் எப்படி செஞ்சிருப்பாங்க..?
ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் உள்ள கிராமப்புறப் பால் பண்ணையாளர்களால் கைவினைஞர் பாரம்பரியத்தில் பாலாடைக்கட்டி பசுவின் பால் அல்லது செம்மறி ஆட்டு பால் கலவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
பிகோஸ் டி யூரோபா தேசிய பூங்காவில் உள்ள கப்ரேல்ஸ் பகுதியில் 1,400 மீட்டர் உயரத்தில் 7C° வெப்பநிலையில் இந்தப் பாலாடைக்கட்டி தயாரிக்கப்பட்டு, பின் அங்கு அது குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் வரை பாதுகாத்து வைக்கப்படுகிறது. மேலும் கேப்ரேல்களின் வழக்கமான விலை ஒரு கிலோவுக்கு €35 முதல் €40 வரை இருக்கும்.
- மு.குபேரன்.