உலகின் மிகச்சிறிய Camera - என்னங்க 'எறும்பு'க்கே சவால் விடுது! | Omnivision

ஒரு வினாடிக்கு 30 புகைப்படங்களை 40,000 pixels அளவில் எடுக்கக் கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கேமரா மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சைகளில் நோயாளிகளுக்கு உதவுகிறது.
Camera
Camera timepassonline

மனிதனின் 'அறிவியல் கண்டுபிடிப்பு' எனும் பேராசைக்கு லேட்டஸ்ட் இரையாக, பெரிய பொருட்கள் சிறிதாகவும், சிறிய பொருட்கள் பெரியதாகவும் தயாரிக்கப்பட்டு கவனம் ஈர்க்கின்றன. அந்த வரிசையில் புதிதாக இடம்பெற்றுள்ளது தான் Omnivision நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, OVM6948 எனும் மிகச்சிறிய கேமரா. வணிக பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இதன் நீளம் 1.158 mm மட்டுமே. அவ்ளோ சின்னது!

இந்த கேமராவானது, சென்சார்கள் போல செயல்படும் சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமான உருளை வடிவ தூண்கள் இணைந்த அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணும், ஒரு ஒளியைக் கடத்தும் ஆண்டெனாவாக வேலை செய்கிறது. எப்படி என்றால் ஒளியைப் பெற்று, ஒரு ஒலி அலைமுனையை வடிவமைக்கிறது.

இந்த ஒலி அலைகள் இணைந்து, ஒரு வினாடிக்கு 30 புகைப்படங்களை 40,000 pixels அளவில் எடுக்கக் கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கேமரா மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சைகளில் நோயாளிகளுக்கு உதவுகிறது. இதற்காகத் தான் மனித உடலில் உள்ள சிறிய நரம்புகளை விடவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 'உலகின் வணிக மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான, மிகச்சிறிய கேமரா' என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.

- மு. இசக்கிமுத்து.

Camera
Trichy : தங்கத்தினால் நெய்த 7 லுங்கிகள் - 'அயன்' சூர்யாவை மிஞ்சிய கடத்தல் கில்லாடி !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com