ஒரு டீப்பாட்டோட விலை 24 கோடியா?! அப்படி என்ன அந்த டீப்பாட்டில் இருக்கிறது என்பதை பார்ப்போம். இந்த டீப்பாட்டை இங்கிலாந்தைச் சேர்ந்த என்.சேத்தியா அறக்கட்டளை வைத்திருக்காங்க. இவர்களாலதான் 2016-ல் கின்னஸ் சாதனைப் பட்டியலில் மிக மதிப்புள்ள டீப்பாட் என இந்த டீப்பாட் இடம் பிடிச்சுருக்கு. 2016-ல் இதனை மதிப்பிட்ட போது அமெரிக்க டாலர் படி $3,000,000. (அதாவது இந்திய மதிப்பு படி சுமார் 24 கோடி)
இதில் அப்படி என்ன சிறப்பு?
இந்த டீப்பாட்டின் கைப்பிடி மாமத் வகை யானையோட தந்தத்தால் செய்யப்பட்டது. இது முழுவதும் 18-கேரட் மஞ்சள் தங்கத்தாலும் அதனைச் சுற்றி வைரக்கற்களாலும் செய்யப்பட்டுள்ளது. இதில் 1658 வைரக்கற்கள் மற்றும் 386 தாய்லாந்து மற்றும் பர்மா மாணிக்கங்கள் உள்ளன. இதன் மையத்தில் 6.67 கேரட் மதிப்புள்ள மாணிக்கம் உள்ளது.
இந்த மதிப்புமிக்க டீப்பாட் ”அகங்கார வாதி” (The Egoist) என்று அழைக்கப்படுகிறது. இந்த டீப்பாட் இத்தாலியைச் சேர்ந்த நகைக்கடைகாரர் ஃபுல்வியோ ஸ்கேவியாதான் செய்திருக்கார்.
- மா. இராகேஷ் சர்மா.