Mr.Beast
Mr.Beasttimepass

Mr.Beast : 168 மணி நேரம் உயிரோடு சவப்பெட்டியில் இருந்த பிரபல Youtuber !

முழு அனுபவத்தையும் சவப்பெட்டியில் கேமராவை பொருத்தி பதிவு செய்துள்ளார். இது தனக்கு பெருமளவு மன வலியை தந்ததாகவும், மிகவும் கடினமாக இருந்ததாகவும் வீடியோவில் தனது பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Published on

Mr.Beast என்று அழைக்கப்படும் யூடியூபர் விதவிதமாக சாகசங்களில் ஈடுபட்டு சர்ச்சைகளை கிளப்புவதற்கு பெயர் போனவர். அவர் ஈடுபடும் செயல்கள் வினோதமானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். இவருக்கு 200 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்கள் உள்ளனர்.

சமீபத்தில் அவரது புதிய முயற்சியான, 'உயிரோடு சவப்பெட்டியில் 7 நாட்கள் புதைந்திருப்பது' குறித்து வீடியோ ரசிகர்கள் மத்தியில் சுமார் 7 கோடி வியூஸுகளை கடந்து வைரலாகி இருக்கிறது. மிஸ்டர் பீஸ்ட் தனது யூடியூப் பக்கத்திற்காக தன்னை கண்ணாடி பெட்டியில் புதைத்து, உணவு தண்ணீர் இல்லாமல் ஏழு நாட்கள் இருந்திருக்கிறார்.

இந்த முழு அனுபவத்தையும் சவப்பெட்டியில் கேமராவை பொருத்தி பதிவு செய்துள்ளார். வீடியோவில் இது தனக்கு பெருமளவு மன வலியை தந்ததாகவும், மிகவும் கடினமாக இருந்ததாகவும், இதை யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்றும் தனது பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எப்படி எல்லாம் கிளம்புறாங்கப்பா!

- சையத் சஜானா. பா.

Mr.Beast
$1 Vs $100,000,000 Car : Youtube ஐ கலக்கும் MrBeast இன் வைரல் வீடியோ !
Timepass Online
timepassonline.vikatan.com