Tamil Cinema Heroines : நல்லா நடிச்சும் வாய்ப்பு இல்லாமல் போன ஹீரோயின்ஸ்

ஸ்ரீதிவ்யா எப்பவும் கிளாமரா ஆடை குறைவான காட்சிகள்ல நடிக்க மாட்டாங்க.
வாய்ப்பு இல்லாமல் போன ஹீரோயின்ஸ்
வாய்ப்பு இல்லாமல் போன ஹீரோயின்ஸ் Timepass
Published on

தமிழ் சினிமா பொருத்தவரைக்கும் அழகா இருந்தாலும் நல்ல நடிக்க தெரிஞ்சாலும் மட்டும் சினிமால வளர்ச்சி அடைய முடியாது போல. எண்ணவே முடியாத அளவுக்கு ஹீரோயின்ஸ் இப்ப தமிழ் இண்டஸ்ட்ரில இருக்காங்க. இப்ப வரக்கூடிய ஹீரோயின்ஸ தோடர்ந்து நிறைய படங்களை பார்க்க முடியுரதில்லை. அப்படி தமிழ் சினிமால ரீசண்டா ரொம்ப அண்டர்- ரேட்டடா இருக்கக்கூடிய ஹீரோயின்ஸ பத்திதான் நாம இதுல பார்க்க போறோம் !!

சுனைனா :

இந்த லிஸ்ட்ல நம்ம ஃபர்ஸ்ட் பார்க்க போறது சுனைனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நாலு மொழிகள்லயும் நடிச்சிருக்காங்க. 2008ல வெளிவந்த 'காதலில் விழுந்தேன்' தான் இவங்க நடிச்சமுதல் தமிழ் படம். அடுத்து வம்சம், நீர்ப்பறவைனு நிறைய நல்ல படங்கள் பண்ணினாங்க இருந்தாலுமே தமிழ் சினிமால இவங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கலனுதான் சொல்லணும். அழகான முகம் அம்சமான நடிப்புனு எல்லாம் இருந்தும் ஏனோ பெரிசா ஒரு ரவுண்டு வரல

ஸ்ரீதிவ்யா :

ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்ல பிறந்தவங்க. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடிச்சிட்டு இருந்தாங்க. ஸ்ரீதிவ்யா தன்னுடைய நடிப்பு கரியற சின்ன வயசுலயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. குழந்தை நட்சத்திரமா திரை உலகத்துக்கு வந்தவங்க. சிவகார்த்திகேயன் கூட நடிச்ச 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தான் ஸ்ரீதிவ்யாவுடைய முதல் தமிழ் திரைப்படம். ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டைனு பல படங்கள் நடிச்சாங்க. ஸ்ரீதிவ்யா எப்பவும் கிளாமரா ஆடை குறைவான காட்சிகள்ல நடிக்க மாட்டாங்க. ஒருவேளை அதனாலதான் என்னமோ ஸ்ரீதிவ்யா சீக்கிரமா பீல்ட் அவுட் ஆயிட்டாங்களோனு கூட தோணுது

ரம்யா நம்பீசன் :

ரம்யா நம்பீசன் கேரள மாநிலத்தில பிறந்தவங்க. பின்னணி பாடகியாதான் இவங்க கேரியர ஸ்டார்ட் பண்ணிருக்காங்க. அப்படி பல மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்காங்க. 'ஒரு நாள் ஒரு கனவு' படம் மூலமா தமிழ்ல என்ட்ரி கொடுத்தவங்களுக்கு 'பீட்சா' தான் பேர் வாங்கி கொடுத்துச்சு. அதே மாதிரி 'குள்ளநரிக்கூட்டம்' படத்துலயும் சூப்பரா நடிச்சிருப்பாங்க. 'பாண்டியநாடு' படத்துல "ஃபை ஃபை ஃபை" பாட்டு இவங்க பாடினதுதான்பா இப்படி ஏகப்பட்ட திறமைகள் இருந்தும் இப்ப படங்கள்ல அவ்வளவா பார்க்க முடியல "குளு குளு ஆஃபர் சத்யானா சூப்பர்"னு டிவி விளம்பரத்துல மட்டும்தான் இப்போ வந்துட்டு போறாங்க

தான்யா ரவிச்சந்திரன் :

பழைய நடிகர் ரவிச்சந்திரனுடைய பேத்தி. நெஞ்சுக்கு நீதி, கருப்பன் மாதிரியான படங்கள்ல அழகாவும் இருப்பாங்க நல்லாவும் நடிச்சிருப்பாங்க. இதுபோக பேப்பர் ராக்கெட்ன்ற வெப் சீரிஸ்லயும் நடிச்சிருந்தாங்க இருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தான்யாவுக்கு கிடைக்கல.

அஞ்சலி :

இந்த லிஸ்ட்ல ரொம்ப சீனயரான நடிகைகள்ல அஞ்சலியும் ஒருத்தர். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம்னு எல்லா மொழிகள்லயும் கலக்கினவங்க. நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு அப்படிங்கற மாதிரியான பீலிங்தான் அஞ்சலியோட பிளஸ். அங்காடித்தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி எல்லாம் அஞ்சலி ஆக்டிங்ல ஸ்கோர் பண்ணின படங்கள். சமீபமா அஞ்சலியை பார்த்தே ரொம்பநாளான மாதிரி ஃபீல்

நெ.ராதிகா

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com