HBDVijay | இன்னிக்கு பிறந்த நாள் விஜய்க்கா... அஜீத்துக்கா? -சந்தேகத்தை உண்டாக்கிய நெட்டிசன்கள்!

விஜய் பிறந்தநாளான இன்று அஜீத்தும் ட்ரெண்டானார்...எப்படி தெரியுமா..?
ajith-vijay
ajith-vijayTimepass
Published on

ஜூன் 22 என்றாலே விஜய்யின் பிறந்தநாள் தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். அன்றைய நாளில் விஜய்யின் ரசிகர்கள் அன்னதானம், ஏழைகளுக்கு பொருட்கள் வழங்குதல் போன்ற பல செயல்கள் செய்வதும் அதை சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் செய்வதுமாகத் தான் இருப்பார்கள். அதேப் போல் இந்த வருடமும் அவர்கள் விஜய்க்காக பல நல்ல விஷயங்களை முன்னெடுத்து செய்தார்கள். மதுரையில் அதிகாலையில் பிரியாணி வழங்கி, ஸ்விகி-ஸொமாட்டோ ஊழியர்களுக்கு இலவசமாக 2 லிட்டர் பெட்ரோல் என அமர்க்களப்படுத்தி விட்டார்கள். மாவட்ட தலைநகரங்களில் 'விலையில்லா விருந்தகம்', இலவச பேருந்து பயணம், மரக்கன்று வழங்குதல் என பல விஷயங்களை முன்னெடுத்துச் செய்தனர். இணையத்தில் அது ட்ரெண்டிங்கிலும் இருந்தது. ஆனால் திடீரென அஜீத் பெயரும் ட்ரெண்டாகத் தொடங்கியது.

ajith
ajithtimepass

விஜய்யின் பிறந்தநாளாக இருந்தாலும் எப்போதும் கொண்டாட வேண்டியது அஜீத்தாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அஜீத்தின் வெறித்தனமான ரசிகர்கள் நெட்டிசன்கள் அவதாரமெடுத்து சோஷியல் மீடியாவில் பல சேட்டைகள் செய்து வருகின்றனர்.


#MyDearAJITHKUMAR, #Vidaamuyarchi #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகளுடன் அஜீத்தின் எவர்கிரீன்  ஃபோட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் புக் செய்த பார்ட்டி ஹாலை அஜீத் ரசிகர்கள் ஹைஜாக் செய்தது, 'சம்பவம் இருக்கு... இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு!' அப்படின்னு போஸ்ட் போடுறது என சோஷியல் மீடியாவையே பரபரப்பாக மாத்தி வைத்தார்கள் சிட்டிசனின் நெட்டிசன்கள்.

ட்விட்டரில் பல பேர், "தல, தளபதின்னு சொல்லி இரண்டு நடிகர்களோட ரசிகர்களும் சண்டை போட்டுட்டு ட்ரெண்ட் ஆகிட்டுத்தான் இருப்பாங்க... என்ன இருந்தாலும் இன்னைக்கு யாருக்கு பிறந்தநாள்னு கன்ஃப்யூஸ் ஆகுற அளவுக்கா ட்ரெண்ட் ஆக்குறது? அட போங்கப்பா!'' என செல்லமாக நொந்து கொண்டார்கள்.

என்னதான் ரசிகர்களுக்கு மத்தியில் சண்டை நடந்தாலும் இன்னொரு பக்கம் விஜய்யின் 'லியோ' படத்துடைய செகண்ட் லுக் போஸ்டர்ஸ் அவரது பிறந்தநாள் அன்றே வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகிட்டு வருது. ஒரு சில சிக்கலுக்குப் பிறகு விஜய்யின் பிறந்தநாள் அன்றே 'லியோ' படத்துடைய செகண்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியானதை பிறந்தநாள் வாழ்த்துடன் சேர்த்து விஜய் ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடிக்கிட்டு இருக்காங்க!

- கலையரசி சு  

Timepass Online
timepassonline.vikatan.com