எதுக்கெடுத்தாலும் எல்லோரும் சொல்ற வார்த்தை இடியட். அப்படிப்பட்ட இந்த இடியட் வார்த்தையை அதிகம் பயன்படுத்துற Educated Peopleலே Educated Idiots ஆக அவங்க பண்ற சில சில்லி திங்ஸ் தான் இதெல்லாம்... வாங்க சொல்றேன்!
காரில் செய்யும் கலாட்டா! - ஒரு கார் வச்சிருக்கேன்ற பேர்ல ரோட்ல யாரு போனாலும் என்னைவிட அவ எப்படி வேகமா போலான்னு சீட் பெல்ட் கூட போடாம தன்ன எதோ ரேசரா நினைச்சிட்டு வேகமா போறது, ஏசியையும் போட்டுக்குறது இயற்கையை ரசிக்குறேனு கார் விண்டோவையும் திறந்து வச்சிக்கிறது. இதுமட்டுமா கூலிங்கான கார்ல எதுக்குயா கூலிங்க்ளாஸ். கூலிங் க்ளாஸ் வச்சி இருக்கன்றத காட்டுறதுக்காகவே கார்ல, தியேட்டர்ல, ஏன் பாத்ரூம்ல கூடவா இந்த கூலிங் க்ளாஸ் போடுறது? அதைக்கூட மன்னிச்சிடலாம் கார்ல போறவன் பைக்ல போறவனை மதிக்காம தெனாவெட்டா இருக்குறது. பைக்ல போறவன் நடந்து போறவனை இளக்காரமா நினைக்குறதுனு ரொம்பவே சில்லி இடியட்தனம் பண்ணுவாய்ங்க..!
நோ ஏசி...ஆனா குடிக்க மட்டும் குளிர் காலத்துலயும் கூலிங் வாட்டர் - ஏ எப்புட்ரா? அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு சில விஷயங்கள் செய்யுறது தான் இப்போ ட்ரெண்டு. அதுக்குன்னு இப்படியுமா? எனக்கு ஏசி வேணா, எர்கூலர் வேணா, ஃபேன் வேணா ஆனா குடிக்க மட்டும் கூலிங் வாட்டர் வேணும்னு சொல்றவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.
இவங்களுக்கு அப்படியே ஆப்போசிட்டான இன்னொரு ரகம் தான் ஏசியையும் போட்டுக்குட்டு ஃபேனையும் போடுறது. எங்க இருந்துயா கிளம்புறிங்க?கதவை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு 24 மணி நேரமும் வாங்குற ஏசி காத்தே கொஞ்சம் ஆபத்து தான். இதுல மூச்சு காத்து கூட வெளிய போக விடாம ஃபேன் போடுறதுலாம் ரொம்ப தப்புப்பா! ஃபேன் சுத்துறதை சும்மானாச்சுக்கும் பார்த்துக்கிட்டு மல்லாக்கக் கிடக்குறதும், ஆஃப் ஆனவுடன் எத்தனை நிமிஷத்துல றெக்கை நிக்குதுனு கௌண்ட்-டௌன் பண்றதும் சில்லியோ சில்லித்தனம் பாஸ்!
இதுக்கும் பேர் தான் ஃபேஷன் - படிச்சிருக்கோம் நல்ல பதவியில் இருக்கோம்... ஆனா அதைவிட ரொம்ப முக்கியம் ஃபேஷன்ல நான் எவ்வளவு ட்ரெண்டா இருக்கேன்றது. ரோட்டு கடையில பத்து ரூபா குடுத்து அயன் பண்ணி சட்டை போட்டுட்டு போயி அம்பின்ற பேரு எடுக்குறத விட கசங்கி, கிழிஞ்சு போன சட்டை போட்டுட்டு போய் ரோமியோனு பேரு வாங்குறது தான் எனக்கு பெருமைன்னு ஃபேஷன ஃபேமஸ் ஆக்குறது தான் இப்போ ட்ரெண்டு. நீங்க ஃபேஷனா இருங்க தப்பில்லை. ஆனா, அந்த ட்ரெஸ்ஸை அப்பப்போ துவைச்சுப் போடுங்க. இல்லைனா அதுதான் கொடூர இடியட்தனம்!
தேவையில்லாத இடத்துல தேவையில்லாத வேலை பண்றது - டிராபிக்லையும், சிக்னலையும் நின்னுட்டு இருந்தாலும் சிக்னல் போட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சும் மன திருப்திக்காகவா இல்லை டைம்பாஸுக்காகவா தெரியல அந்த வண்டி ஹாரனை அடிச்சுக்கிட்டே இருக்கிறது. என்னதான் ட்ராஃபிக் போலீஸ் நிறைய ரூல்ஸ் போட்டாலும் ஹாரன் அடிக்கிறத அடிப்படை உரிமையா நினைச்சிக்கிட்டு இந்த பைக்கர்ஸ் பண்றது தான் ரியல் தக்ஸ். சும்மா போய்க்கிட்டு இருக்குறப்போ கை ரெண்டையும் பப்பரப்பானு விட்டுட்டு ஓட்டுறது, இண்டிகேட்டர் போடாம யூ-டர்ன் போடுறது அல்லது பைக்ல போய்க்கிட்டே எச்சில் துப்புறதுனு இடியட்தனம் அன்லிமிட்டா பண்றவங்களுக்கு கருடபுராணத்துல என்ன தண்டனை பாஸ்?
இதே மாதிரி ரியல் லைஃப்ல நிறைய இடியடிக் திங்ஸ் பண்ணி இருப்போம் . என்னதான் இதெல்லாம் மத்தவங்களுக்கு பார்க்கிறப்ப இடியடிக் திங்ஸா இருந்தாலும் மனசுக்குள்ள என்ஜாய் பண்ணிட்டு தான் இருக்கோம். நீங்க பண்ணின இடியட்தனம் என்னன்னு யோசிச்சுப் பாருங்க மக்கா!
என்னது இந்தக் கட்டுரையைப் படிக்கிறதும் இடியட்தனம் தானா..?
அவ்வ்வ்வ்வ்வ்!
-கலையரசி சு