Ooty : ஆவின் பால் விலையுயர்வு - பிள்ளையார் சிலையிடம் மனு அளித்த மக்கள்!

ஊட்டி ஆவின் நிறுவன வளாகத்தில் உள்ள விநாயகர் சிலை முன்பு கோரிக்கை மனுக்களை வைத்து நுகர்வோர் அமைப்பினர் தூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Ooty
Ooty டைம்பாஸ்
Published on

தமிழகத்தின் மற்றப் பகுதிகளைவிட நீலகிரியில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விலையைக் குறைக்க மக்கள் வெகுநாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆவின் நிறுவன அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என நுகர்வோர் அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஊட்டி ஆவின் நிறுவன வளாகத்தில் உள்ள விநாயகர் சிலை முன்பு, ஆவின் பால் விலையைக் குறைக்கக் கோரி மனுக்களை வைத்து நுகர்வோர் அமைப்பினர் தூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- சதீஷ் ராமசாமி.

Ooty
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்
Timepass Online
timepassonline.vikatan.com