நமீதா
நமீதாபாஜக

BJP : 'நம்ம மைசூர் டைகர்.. மைசூர் சிங்கம் வந்தப்பறம்' - அண்ணாமலையை பாராட்டிய நமீதா

‘அர்ஜுனா.. அர்ஜுனா’ என வெள்ளித் திரையிலும்,’ கிஸ் .. கிஸ்.. கிஸ்கால்’ என சின்னத்திரையிலும் கலக்கிய நமீதா மஞ்சள் புடவை, காவி துண்டு சகிதம் மைதானத்தில் இறங்கியதை பாஜக தொண்டர்களாலேயே நம்ப முடியவில்லை.

கோவை பாஜக தெற்கு மாவட்டம் சார்பில், கட்சி நிர்வாகிகளுக்கு இடையேயான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கான காலிறுதி போட்டிகளை நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா தொடங்கி வைத்தார்.

‘அர்ஜுனா.. அர்ஜுனா’ என வெள்ளித் திரையிலும்,’ கிஸ் .. கிஸ்.. கிஸ்கால்’ என சின்னத்திரையிலும் கலக்கி வந்த நமீதா மஞ்சள் புடவை.. காவி துண்டு சகிதம் மைதானத்தில் இறங்கியதை பாஜக தொண்டர்களாலேயே நம்ப முடியவில்லை.

‘ஓ.. இவங்க நம்ம கட்சி தானா.. சொல்லவே இல்ல’ என்று குதூகலத்துடன் அவருடன் செல்ஃபி எடுத்தனர். நமீதா பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, “நம்ம மைசூர் டைகர்.. மைசூர் சிங்கம் அண்ணாமலை ஜி என்டர் பண்ணப்பறம் என் கட்சி ரொம்ப நல்லா ப்ரொகிரஸ் பண்ணிட்டு இருக்கு. அதைப் பார்த்து நான் சூப்பர் ஹேப்பியா இருக்கேன். எங்க பார்த்தாலும் பிஜேபி பத்திதான் பேசறாங்க” என்றார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் கர்நாடகா தேர்தல் குறித்து நமீதாவிடம் கேட்டனர். 'ரைட்டு சீரியஸா போறாங்க’ என சுதாரித்துக் கொண்ட நமீதா, ‘நோ பிராப்ளம். அடுத்தவாட்டி கண்டிப்பா. நாங்க நெறய ஹார்ட் வொர்க் பண்றோம். நம்ம பார்ட்டி தலைவர், பிரதமர் மேல டிரஸ்ட் இருக்கு. இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு” என்று பதிலளித்தார்.

நமீதா
பாஜக தலைவராக அண்ணாமலை - சாதனைகளும் சோதனைகளும்

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com