ADMK : தளபதி சூர்யா - தேவாவாக மாறிய OPS, தினகரன் - ஒரு ருசீகர ஸ்டோரி !

"டி.டி.வி.சார், இந்த அல்வாவை சாப்பிடுங்க டேஸ்டாக இருக்கும்" என ஊட்டி விடாத குறையாக சொன்ன ஓபிஎஸ்ஸை பச்சை மிளகாயை கடித்தது போல் சிரித்தபடியே முறைத்து கொண்டே சட்டென சாப்பிட்டு முடித்து எழுந்தார் தினகரன்.
ADMK
ADMKtimepass
Published on

வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபுவுக்கும், தவமணி மகள் யாழினிக்கும் தஞ்சாவூரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

தளபதி படத்தில் வரும் சூர்யா - தேவா போல் தினகரனும், ஓபி எஸ்-சும் நெருக்கம் காட்டியது தான் ஹைலைட். இருவரும் ஒன்றாக சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் அறுசுவை உணவு தயாராக இருக்கு சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என வலுக்கட்டாயமாக தினகரன் ஓபிஎஸ் இருவரையும் விஜபி டைனிங் ஹாலுக்கு தள்ளி சென்றார் வைத்திலிங்கம்.

மூன்று பேர் அமரக்கூடிய டேபிளை இரண்டு இலை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. அந்த மெகா சைஸ் இலையில் வடை, ஸ்வீட், அப்பளம், பாயாசம் என மெனுக்கள் நிறைந்திருந்தது.

ஜே.சி.டி., பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கு.ப.கிருஷ்ணன். செந்தமிழன், வெல்லமண்டி நடராஜன் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒரே வரிசையில் சாப்பிட அமர்ந்தனர். மூன்று இலை போடக்கூடிய டேபிளில் இரண்டு மெகா சைஸ் இலை போடப்பட்டிருந்ததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.

ADMK
போன ஜென்மத்தில் ஓபிஎஸ் யாராக இருந்திருப்பார்? - ஓர் அலசல்

அதை எளிதாக சரி செய்த ஓபிஎஸ், நாம் தான் இரட்டை என உணர்த்துகிற வகையில் இலையில் பாதியை மடித்து இட நெருக்கடியையும் சரி செய்து சாப்பிட தொடங்கினார்.

இலையில் இருக்கும் மெனுவை பார்த்து மிரண்ட தினகரன், கொஞ்சமாக சாதம் வாங்கி அதில் சிறிதளவு சாம்பார் ஊற்றி சாப்பிட்டார். "டி.டி.வி.சார், இந்த அல்வாவை சாப்பிடுங்க டேஸ்டாக இருக்கும்" என ஊட்டி விடாத குறையாக சொன்ன ஓபிஎஸ்ஸை பச்சை மிளகாயை கடித்தது போல் சிரித்தபடியே முறைத்து கொண்டே சட்டென சாப்பிட்டு முடித்து எழுந்தார் தினகரன்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வமும் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டார். வானும், மண்ணும் பிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா என வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றாத குறையாக முஸ்தபா பாடலை முனுமுனுத்து கொண்டே கலைந்து சென்றனர்.

- கே.குணசீலன்.

ADMK
ஈ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸையும் சேர்த்து வைக்க பேனர் ஐடியாஸ்!
Timepass Online
timepassonline.vikatan.com