அண்ணாமலை நடைபயணம் : குப்பையை வைத்து Selfie Video எடுத்த பாஜக நிர்வாகி !

செல்ஃபி வீடியோ எடுத்தபடி வந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர் "அண்ணே அண்ணே அப்படியே குப்பையோட கேமராவ பாருங்கணே" நம்மள நாமதா ப்ரமோட் பன்னிக்கனும் என தெரிவித்தபடி வீடியோ எடுத்தார். அதை பார்த்த மக்கள்...
Annamalai
AnnamalaiTimepassonline
Published on

அண்ணே அண்ணே அப்படியே குப்பையோட ஒரு செல்பி வீடியோ எடுத்துக்கலாம்...

ராமநாதபுரத்தில் இருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை இன்று முதல் தொடங்கியுள்ளார்.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்த பிறகு  அங்கிருந்து பாதையாத்திரையாக நடந்து கேணிக்கரை வழியாக அரண்மனை பகுதியில் நிறைவு செய்து என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஏறி பொதுமக்கள் முன்பு உரையாற்றிவிட்டு முதல் நாள் பாதையாத்திரையை நிறைவு செய்து புறப்பட்டு சென்றார்.

அவர் சென்றதற்கு பிறகாக பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் அப்பகுதியில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர். இச்செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாராட்டி பேசிக்கொண்டிருந்த போதே திடீரென போனில் செல்ஃபி வீடியோ எடுத்தபடி வந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர் "அண்ணே அண்ணே அப்படியே குப்பையோட கேமராவ பாருங்கணே" நம்மள நாமதா ப்ரமோட் பன்னிக்கனும் என தெரிவித்தபடி வீடியோ எடுத்து நகர்ந்தார்.

அதான பார்த்தோம் என்னடா திடீர்னு அரசியல் வாதிங்க நல்லவுங்களா மாறிட்டாங்களேனு ஆச்சரியப்பட்டோம்னு தலையில் அடித்தபடி கடந்து சென்றனர்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com