கிரிக்கெட்ல அரசியல் பண்ணலாமா?

கிரிக்கெட் பேட்டின் இரண்டு புறத்திலும் இரட்டை இலைகளை வரைந்து ‘பசுமை கிரிக்கெட் போட்டி’ என்று பெயர் வைக்கலாம்.
கிரிக்கெட்
கிரிக்கெட்டைம்பாஸ்

‘பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர் பெயரைச் சொன்னால், செலவுக்கணக்கு எகிறும்’, ‘கட்சிகளின் சின்னங்களை விளம்பரப்படுத்தத் தடை’ என்று தேர்தல் ஆணையம் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும்.

கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்தி எப்படி தேர்தல் விளம்பரங்களைச் செய்யலாம் என்ற ஐடியா மணியின் அரிய ஆலோசனைகள் இவை.

கிரிக்கெட் பேட்டின் இரண்டு புறத்திலும் இரட்டை இலைகளை வரைந்து ‘பசுமை கிரிக்கெட் போட்டி’ என்று பெயர் வைக்கலாம்.

அவுட் கொடுக்கும்போதும் சிக்ஸ் கொடுக்கும்போதும் கையை மேலே தூக்கி ஒரு விரலைக் காட்டுவதற்குப் பதிலாக இரண்டு விரல் களைக் காட்டலாம். இல்லையெனில் ஆசிர்வாதம் செய்வதுபோல் ஐந்து விரல்களைக் காட்டலாம்.

இடைவேளைகளில் மாம்பழங்களையோ அல்லது ஃப்ரூட்டியையோ வழங்கலாம்.

அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கும் பந்து வீச்சாளர்களையும் அதிக முறை டக் அவுட் ஆகும் வீரர்களையும் அழைத்து துடைப்பத்தைக் காட்டி பயமுறுத்தலாம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com