கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
முன்னதாக, அதிமுக பொதுக் குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இதன் வழியாக, அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியானது எடப்பாடி பழனிசாமி வசமானது.