ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சாமியார் திருமலை !

அகில இந்திய தமிழ் திருமேனி சங்கத்தை நடத்தி வருகிறேன். இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் அனுஷா திருமலை. அவர் வேறுயாருமல்ல. என் மனைவி தான்.
ஈரோடு
ஈரோடு timepass

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ய நேற்று (பிப்., 8) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நேற்று காலையில் இருந்தே வேட்பு மனு தாக்கல் நடைபெறும் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் சுயேச்சை வேட்பாளர்களால் அதகளப்பட்டது என்றே கூறலாம்.

அப்போது, நீண்ட தாடி, மேல் சட்டை இன்றி, ருத்ராட்ச கொட்டையும், தலையில் குல்லா அணிந்தபடி வருகை தந்தார் திருமலை ராமலிங்கம்.

நம்மிடம் அவர் கூறுகையில், "என் பெயர் திருமலை ராமலிங்கம். திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் அகில இந்திய தமிழ் திருமேனி சங்கத்தை நடத்தி வருகிறேன். இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் அனுஷா திருமலை. அவர் வேறுயாருமல்ல. என் மனைவி தான்" என்று கூறினார்.

மேலும், "எங்கள் சங்கத்தின் கொள்கை குறித்து சங்கத்தின் அகில உலக தலைவி அனுஷா திருமலைதான் அறிவிப்பு வெளியிடுவார். நான் ஒரு சாதாரண தொண்டன்.

மக்களால் நான், மக்களோடு நான் என்ற கொள்கையோடு புறக்கணிக்கப்பட்ட மக்களின் சார்பில் இங்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வந்துள்ளேன்" என்றவர் திடீரென ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தொடங்கினார்.

அவரது ஆங்கில புலமையால் ஆச்சர்யப்பட்ட செய்தியாளர்கள், நீங்க என்ன படிச்சிருக்கீங்க... என்று கேள்வி எழுப்பினர்.

நான் திருச்சி ஆர்ஈசி கல்லூரியில் பி.இ. (இ.சி.இ) பட்டப்படிப்பை பாதியில் டிஸ்கன்டினியூ செய்து விட்டேன். மேலும் பல வெளிநாடுகளிலும் வேலை பார்த்ததாக கூறினார். உள்ளே போய் வேட்புமனு தாக்கல் முடிச்சிட்டு உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்று கூறி உள்ளே சென்றார்.

செய்தியாளர் - நாராயண சுவாமி.மு.

ஈரோடு
போன ஜென்மத்தில் ஓபிஎஸ் யாராக இருந்திருப்பார்? - ஓர் அலசல்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com