வரலாற்றில் இன்று : மெட்ராஸ் பிரசிடென்ஸி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்ற தினம் !

1967ல ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, `தமிழ்நாடு'னு பெயர் சூட்ட தீர்மானிச்சாங்க.அதன்படி, 1967 ஜூலை 18-ம் தேதி அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை, இது தொடர்பான தீர்மானத்த சட்டப்பேரவையில தாக்கல் செஞ்சாரு..
Tamilnadu
TamilnaduTimepassonline

ஜுலை 18 - தமிழ்நாடு தினம்

இந்தியா சுதந்திரம் வாங்குன பிறகு `மெட்ராஸ் பிரசிடென்ஸி' மெட்ராஸ் மாகாணமாக உருவெடுத்திச்சி. 1956 நவம்பர் 1-ம் தேதி மதராஸ் மாநிலம் உருவானது. 1967 ஜூலை 18ம் தேதி மதராஸ் மாநிலம், அதிகாரப்பூர்வமா `தமிழ்நாடு'னு பெயர் பெற்றது.

இந்தியால இருக்க மற்ற மாநிலங்கள், அவங்களுடைய மாநிலம் பிற மாநிலத்துலயிருந்து பிரிக்கப்பட்ட தினத்த தான் மாநில தினமா கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா, நம்ம தமிழ்நாடு எந்த ஒரு மாநிலத்துல இருந்தும் பிரிக்கப்படாததால தமிழ்நாட்டுக்குனு மாநில தினம் குறிப்பிடப்படாமலேயே இருந்தது.

2019ல ‘இந்தியாவுல மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதிய தமிழ்நாடு மாநில தினமா கொண்டாடலாம்னு அப்போதைய அதிமுக அரசு அறிவிப்பு  வெளியிட்டிச்சி.

அதுக்குபிறகு, 2021ல திமுக அரசு பதவியேற்ற பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “1956 நவம்பர் 1ல இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுச்சி, அதனடிப்படையில அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா,கேரளா போன்ற மாநிலத்தின் சில பகுதிகள் பிரிஞ்சது. 

2019ல இருந்து நவம்பர் 1-ம் தேதிய தமிழ்நாடு மாநில தினமா அறிவிச்சிருந்தத பல அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ்க் கூட்டமைப்பினரும், தமிழ் அறிஞர்களும் ஏத்துக்கல. நவம்பர் 1-ம் தேதி எல்லைப் போராட்டத்த நினைவுகூரும் நாளா கருதணுமே தவிர, தமிழ்நாடு நாளா கொண்டாடுறது பொருத்தமா இருக்காதுனு, "மெட்ராஸ் மாகாணம்" என்கிற பெயர, பேரறிஞர் அண்ணா  1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடுனு  பெயரிடப்பட்ட அந்த நாளதான் தமிழ்நாடு நாளா கொண்டாடப்படனும்னு தொடர்ந்து வலியுறுத்திட்டி இருந்தாங்க. இத கருத்துல வெச்சி, ஜூலை 18-ம் தேதிய தமிழ்நாடு நாளா கொண்டாட அரசாணை வெளியிடப்படும்" என்று சட்டபேரவையில அறிவிச்சாரு.

அதுக்குமுன்ன, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் நவம்பர் 1-ம் தேதிய அவங்களுடய மாநில தினமா கொண்டாடிவர நிலையில, ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான தெலங்கானா மாநிலம், அவங்களுடய மாநில தினத்த ஜூன் 2-ம் தேதி கொண்டாடி வராங்க.


1956ல மாநில எல்லைகள மறு வரையறை செய்யும் சட்டத் திருத்தம்  மூலமா சென்னை மாகாணத்துடய மேற்கு கடற்கரைப் பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் பிரிக்கப்பட்டுச்சி. வட பகுதி ஆந்திராக்கு போச்சி. மீதி இருந்த நிலப்பகுதி சென்னை மாநிலம்ன்ற பெயர்ல அழைக்கப்பட்டுச்சி.

சென்னை மாநிலம்ன்ற பெயரை மாத்தி, தமிழ்நாடுன்ற பெயரைச் சூட்டணும்னு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல உண்ணாவிரதப் போராட்டத்த தொடங்கினாரு. 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த அவரு இறந்தும் போனாரு.

அதுக்குபிறகு, தமிழ்நாடுன்ற பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை தீவிரமாச்சி. அப்புறம், தமிழ்ல மட்டும் ‘தமிழ்நாடு’, ஆங்கிலத்துல ‘மெட்ராஸ் ஸ்டேட்’ அப்டின்னுதான் குறிப்பிடனும்னு தீர்மானிக்கப்பட்டுச்சி. 1961 பிப்ரவரி 24-ல் சட்டப்பேரவையில் இது அறிவிப்பா வெளியிடப்பட்டிச்சி.

1967ல ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, மாநிலத்துக்கு `தமிழ்நாடு'னு  பெயர் சூட்ட தீர்மானிச்சாங்க.அதன்படி, 1967 ஜூலை 18-ம் தேதி அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை, இது தொடர்பான தீர்மானத்த சட்டப்பேரவையில தாக்கல் செஞ்சாரு.. எல்லா கட்சியின் ஆதரவோட இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிச்சி.

அப்போ பேசிய அண்ணா, "பெயர் மாற்றம் செய்வதாலேயே, தமிழ்நாடு தனி நாடாகிவிடாது. இந்தியப் பேரரசின் பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் `தமிழ்நாடு வாழ்க' என்று நாம் வாழ்த்துவோம்" அப்டின்னு சொல்லியிருக்காரு.

நம்ம மாநிலத்துக்கு பேரு வெச்ச தினம்தான் இன்னிக்கு.தென்னிந்திய மாநிலங்கள்ல ரொம்பவே சிறப்பு வாய்ந்தது நம்ம தமிழ்நாடு. நம்ம மாநிலத்துக்கு தமிழ்நாடுனு பெயர் சூட்டப்பட்ட நாள நினைவுகூருற விதமா வருடாவருடம்  ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு தினம்’மா கடந்த ஆண்டுல இருந்து கடைப்பிடிச்சிட்டு இருக்கோம். இந்த அறிவிப்ப கடந்த 2021 அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவையில அறிவிச்சாங்க. இன்னிக்கு நம்ம எல்லாரும் தமிழ்நாடு, தமிழ்நாடுனு அவ்ளோ கர்வமா சொல்லிட்டு இருக்கோம். ஆனா, இந்த பேர வெக்க நம்ம தலைவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்க..

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com