"ஜி, இன்னைக்கு ஆதார் கார்ட்ட எதோட இன்னைக்க சொல்லலாம்?"
"பான் கார்ட் ஜி?"
"அதான் எப்பயோ சொல்லி, இணைக்காதவுங்களுக்கு fineனும் போட்டாச்சே ஜி"
"ரேஷன் கார்ட் ஜி?"
"அதெல்லாம் இணைக்க சொல்லியாச்சு ஜி"
"ட்ரைவிங் லைசன்ஸ் ஜி?"
"அதெல்லாம் பழசு ஜீ"
"என்ன ஜி நீங்க.. அப்ப வாக்காளர் அடையாள அட்டைய ஆதார் கார்ட்டோட இணைக்க சொல்லுவோமா ஜி?"
"போன வாரம்தான சொன்னோமே ஜி. அனைத்து கட்சி கூட்டமும் நடத்துனோம்ல"
"சரி ஜி.. அப்ப ஆதார் கார்டயே ஆதார் கார்ட்டோட இணைக்க சொல்லுவோமா ஜி?"
"அய்யோ ஜி.. ஆதார் கார்ட்ட அவ்ளோ பாதுகாப்பில்லனு அத கடைகள்ல ஜெராக்ஸ் கூட எடுக்கக் கூடாது, மிஸ் யூஸ் பண்ணிருவாங்கனுனு நாமதான சொன்னோம். அப்டிப்பட்ட ஆதார் கார்ட்ட போய் ஆதார் கார்ட்டோட இணைக்க சொல்றீங்க."
"சரி ஜி.. இன்னைக்கு பான் கார்ட்டோட ஆதார இணைக்க சொல்லலாமா?"
"அதான்.."