Karunanidhi
Karunanidhitimepass

Kalaignar Karunanidhi : புது வீட்டில் கலைஞரின் பேனா சிலை வைத்த திமுககாரர் !

தன் புது வீட்டிற்கு கலைஞரின் பேனா இல்லம் என்று பெயர் வைத்துள்ளார். மேலும், வீட்டில் இரண்டு பேனா சிலையையும் வைத்துள்ளார்.
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 134 அடி உயரத்தில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது.

ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வரவேற்புகளும் எதிர்ப்புகளும் மாநிலம் முழுதும் கிளம்பியது.

இந்நிலையில், மதுரை திமுகவை சேர்ந்த சிந்து நாகேந்திரன் என்பவர் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். விரையில் குடிபுகும் தன் புது வீட்டிற்கு கலைஞரின் பேனா இல்லம் என்று பெயர் வைத்துள்ளார். மேலும், வீட்டில் இரண்டு பேனா சிலையையும் வைத்துள்ளார்.

Karunanidhi
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'
Timepass Online
timepassonline.vikatan.com