BJP : பாஜக பொது கூட்டத்தில் மேடையிலேயே பர்ஸ்கள், செல்போன் திருட்டு!

அண்ணாமலை பங்கேற்ற மேடையில் 9 பேரின் பர்ஸ் மற்றும் ஒருவரின் செல்போன் திருட்டு போனது.
BJP
BJPtimepass
Published on

பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் சோலாரில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அவருடன் மேடையில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அண்ணாமலை பங்கேற்ற மேடையில் 9 பேரின் பர்ஸ் மற்றும் ஒருவரின் செல்போன் திருட்டு போனது.

இதனை மேடையில் ஒலிபெருக்கியில் அறிவித்த நிர்வாகி ஒருவர், மேடையில் இருக்கும் அனைவரையும் கீழே விடாமல் சோதனையிட வேண்டும் என கூறினார். ஆனால் யாரையும் சோதனை செய்யவில்லை. சிறிது நேரம் மேடையிலும் கூட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அண்ணாமலை மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றார்.

- இளையபதி.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி.

BJP
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'
Timepass Online
timepassonline.vikatan.com