கட்சி ஆரம்பிக்கத் தேவையான ஏழு அம்சங்கள் இதான் பாஸ்!

கையில மைக் கிடைச்சுதுன்னா வாயில இருந்து எது வேணாலும் வரலாம். ஆனா எல்லாத்தையும் சொல்லி முடிச்சதும் கடைசியாக 'இது என் தனிப்பட்டக் கருத்து'ங்கிறதை மட்டும் மறக்காம சொல்லத் தெரியணும்.
கட்சி ஆரம்பிக்கத் தேவையான ஏழு அம்சங்கள் இதான் பாஸ்!

தமிழ்நாட்டுல இப்போவெல்லாம் ஒரு கட்சி தொடங்கணும்னா தொண்டர்கள் இருக்கிறாங்களோ இல்லையோ... காசு பணம் இருக்குதோ இல்லையோ... இதெல்லாம் கண்டிப்பா இருந்தே ஆகணும். என்னென்னனு தெரிஞ்சிக்கலாமா..?

வீடு வெச்சுருக்கிறது பங்களா வெச்சுருக்கிறதெல்லாம் முக்கியமில்லை. சிட்டிக்கு வெளியில சொந்தமாக உங்களுக்கு ரிசார்ட் இருக்கணும். அதுதான் முதல் விஷயம். சொந்தமாக ரிசார்ட் இல்லைனாலும் அட்லீஸ்ட் அதை உங்களுக்கு சொந்தமாக்கவாச்சும் தெரிஞ்சிருக்கணும்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

ரெண்டாவது விஷயம் ராவோடு ராவாக நீங்கள்லாம் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆக மாறணும். பதறாதீங்க பதறாதீங்க. அதாவது அவர் மாதிரி யாரையும் பார்த்து சிரிக்கவே கூடாது. உங்களை இடுப்பைக் கிள்ளி கிச்சுகிச்சு மூட்டினாலும் வீடு இடிஞ்சது மாதிரியே முகத்தை வெச்சுக்கணும்.

சிரிச்சாப்போச்சு ரவுண்டே முடிஞ்சாலும் நீங்க சிரிக்கக் கூடாதுங்கிறது ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் மக்களே.

கையில மைக் கிடைச்சுதுன்னா வாயில இருந்து எது வேணாலும் வரலாம். ஆனா எல்லாத்தையும் சொல்லி முடிச்சதும் கடைசியாக 'இது என் தனிப்பட்டக் கருத்து'ங்கிறதை மட்டும் மறக்காம சொல்லத் தெரியணும். ஏன்னா அது உங்க தனிப்பட்ட கருத்து.

பள்ளிக்கூடத்தில் போட்ட ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படீஷன் எல்லாம் அங்கே கை கொடுத்துச்சோ இல்லையோ இங்கே கொடுக்கலாம். இருக்கின்ற கட்சியிலிருந்து எஸ்கேப் ஆகி அதற்கு கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் கொடுத்து புதிய அணிக்கு என்டரைத் தட்ட பேருதவியாக இருக்கும்.

ரஜினி காந்த்
ரஜினி காந்த்

திரும்பவும் இங்கிருந்து இன்னொரு அணிக்குத் தாவும் நிலையும்கூட இருப்பதனால் கற்ற கலையை கவனமாக கருத்தில் நிலைத்து வைத்திருக்க வேண்டும்.

எந்த ஒரு விஷயத்தை தொடங்குறதுக்கு முன்னாடியும் ஸ்வீட் சாப்பிடுறதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போவெல்லாம் எந்த ஒரு விஷயத்தை செய்றதாக இருந்தாலும் நீங்க செய்ய வேண்டியது தியானம். ஆகவே ஆட்சி செய்றதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டியது தியானம். ஆகவே...

சினிமாவை ஓட வைக்கத்தான் முன்னாடியெல்லாம் பன்ச் தேவைப்பட்டுச்சு. பார்த்து பார்த்து போரடிச்சுடுச்சோ என்னவோ தெரியலை இப்போலாம் இங்கேயும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அரசியலில் கையறு நிலையோ, இக்கட்டான சூழ்நிலையோ வந்துவிட்டால் பேஸ்மென்ட் ஆட்டம் கண்டாலும் பில்டிங் வலுவாக இருப்பதுபோல சீன் போட்டு பன்ச் பேசத் தெரியவேண்டும். (அடுத்த ஒரு வாரத்துக்கு அதுதான் மீம் மெட்டீரியல் என்பது வேற டிபார்ட்மென்ட்).

விஜயகாந்த்
விஜயகாந்த்

அப்புறம் இந்த ஒண்ணு எல்லாக் காலத்துக்கும் பொருந்துற ஒண்ணு, அதாவது கட்சி நடத்துற நீங்க கல்யாணம் ஆகாத பொண்ணையோ பையனையோ அட்லீஸ்ட் தம்பி வீடு, அக்கா வீட்டுலையாவது அப்படி ஒரு வரனை வெச்சுருக்கணும். அப்பத்தான் போன மாசத்துல மண்டையை உடைச்சு சண்டை போட்டிருந்தாலும் இந்த மாசத்துல தேர்தல் கூட்டணினு ஒண்ணு வரும்போது கல்யாணப் பத்திரிகையைக் கொண்டுபோய்க் கொடுத்து காம்ப்ரமைஸ் செய்யலாம்.

அய்யய்யோ அப்படி யாருமே ஸ்டாக் இல்லையே என்றால் அதற்கும் பதற வேண்டாம் உங்களுக்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிற ஃபார்முலா. ஸோ, டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி..!

பின்குறிப்பு: இதெல்லாம் கட்சி நடத்தத்தான் மக்களே... ஆட்சி நடத்துறதுக்கு இல்லை!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com