* கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். - செந்தில் பாலாஜி
* ”மரத்தின் மீது குரங்கு தாவுவது போல ஏன் வருகிறீர்கள் ?” கடலூரில் செய்தியாளர்களிடம் கடுகடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
* இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா
* மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் - 'பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்' என கூறினார்.
*, ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
* "மோடி கடவுளின் அவதாரம். அவர் விரும்பினால் சாகும்வரை அவர் பிரதமராக இருக்கலாம். கடவுள் தன் பிரதிநிதியாக மோடியை அனுப்பியுள்ளார்" - உ.பி மேல்நிலைக்கல்வித்துறை இணைமந்திரி குலாப்தேவி
* கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்தது மிகத் தவறான முடிவு - சீமான்
* திமுக.,வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஹிந்தி மொழியை எதிர்த்து வருகிறார். ஆனால் ஹன்சிகா மோத்வானி, எமி ஜாக்சன் போன்ற இந்தி நடிகைகளுடன் நடிக்கிறார் - அண்ணாமலை
* ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, என் தம்பி தீபக் தெரிவித்துள்ளார். அவர் சசிகலாவின் பிடியில் உள்ளார் - ஜெ.தீபா