Jayalalitha : அம்மா வா? அன்னபூரணி யா? - அதிமுகவின் புது விளம்பரம் !

திண்டிவனம் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள சிறு பாலங்களில், "அன்னபூரணியே! மகராசியே!" என்றெல்லாம் வாசகங்களை எழுதியுள்ளனர்.
Jayalalitha
Jayalalitha டைம்பாஸ்
Published on: 

திருவண்ணாமலை, திடீர் சாமியார்கள் உருவாகும் இடமாகவும், அடைக்கலம் தேடும் இடமாகவும் மாறிவிட்டது. செங்கல்பட்டு பகுதியில் பிரபலமாகிப்போன அன்னபூரணி அரசு அம்மா.

தற்போது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் ஆசிரம குடில் ஒன்றை அமைத்து அங்கேயே அமர்ந்துவிட்டார். இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் பகுதி அ.தி.மு.க-வினர் ஜெ. பிறந்தநாளையொட்டி சுவர் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.

திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள சிறு பாலங்களில், "அன்னபூரணியே; மகராசியே!" என்றெல்லாம் வாசகங்களை எழுதியுள்ளனர்.

இந்த விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ள இடத்திற்கு சுமார் 3 கி.மீ தொலைவில் தான் அன்னபூரணி அரசு அம்மாவின் ஆசிரமமே அமைந்திருக்கிறது. இலைக்கட்சிக்காரங்க புகழ்ந்திருப்பது எந்த அம்மாவோ..!

- கண்ணதாசன்.

Jayalalitha
'அம்மா மறைந்த நன்னாளில்' - டைம்பாஸ் மீம்ஸ்
Timepass Online
timepassonline.vikatan.com