அமைச்சரவை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். ஒருவேளை ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழ்நாடு பா.ஜ.க.காரர்களை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் கொண்டிருந்தால் யாருக்கு எந்த இலாகா?
சொந்தக் கட்சிக்காரர்களையே வீடியோ எடுத்து அசிங்கப்படுத்த ஆள் வைத்திருக்கும் அண்ணாமலை - செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்.
கட்சி மாறுவதில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் விளையாட்டு வீரர்களையே மிஞ்சும் குஷ்பு - விளையாட்டுத்துறை அமைச்சர்.
கம்ப ராமாயணம் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று சொல்லும் தமிழிசை சௌந்தர்ராஜன் - மருத்துவத்துறை அமைச்சர்.
'ஹைகோர்ட்டாவது....' புகழ் ஹெச்.ராஜா - சட்டத்துறை அமைச்சர்.
ஆருத்ரா நிதிநிறுவன மோசடியில் சிக்கிய, குற்றம் சாட்டப்படும் ஆருத்ரா சதீஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி - நிதித்துறை.
காலில் செருப்பு அணியாத பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி - கால்நடைத்துறை அமைச்சர்.
'மச்சான்' நமீதா - தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்.
கையும் களவுமாக மாட்டிக்கொண்ட கே.டி.ராகவன் - கைத்தறி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்.
வாட்ச் பில்லுக்கு எக்குத்தப்பு கணக்கு சொன்ன வானதி சீனிவாசன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
உலக மக்கள் தொகைக்குக் கணக்கு சொல்லி திகைக்க வைத்த மதுவந்தி - உயர்கல்வித்துறை அமைச்சர்.
எல்லோராலும் சகட்டுமேனிக்கு அந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்படும் கேசவ விநாயகம் - பெண்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர்.