Tomato Price : காமராஜர் பிறந்தநாள் - இனிப்பிற்கு பதில் தக்காளி வழங்கிய விசிக !

பொது மக்களுக்கு காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனிப்புகளுக்கு பதிலாக தற்போது பொது மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள தக்காளிகளை வழங்கினர்.
Tomato
Tomato Tomato

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் சிலைக்கு காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனிப்புகளுக்கு பதிலாக தற்போது பொது மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள தக்காளிகளை வழங்கினர். இது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மற்ற பல கட்சிகளின் திரும்பி பார்க்க வைத்தது.

- இளையபதி

Tomato
Tomato Price : மனைவியிடம் கேட்காமல் குழம்பில் தக்காளியை போட்ட கணவன் - வீட்டைவிட்டு போன மனைவி !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com