BJP : Time Travel செய்து வந்து ஆர்ப்பாட்டமா? - கேலிக்கு உள்ளான பாஜக போஸ்டர் !

டைம் ட்ராவல் மூலம் 2021ல் இருந்து 2023க்கு வந்து பா.ஜ.கவினர் யோகாவுக்கும் மோடியின் சாதனைக்கும் கூட்டமும் நடத்தும் அளவிற்கு டெக்னாலஜியில் பா.ஜ.கவினர் சீனாவை மிஞ்சிவிட்டதாக எதிர்கட்சியினர் கிண்டல்.
BJP
BJP bjp
Published on

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இன்று சர்வதேச யோகா தினவிழா மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக ராமநாதபுரம் நகர் முழுவதும் பா.ஜ.க சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் 21.08.2023 என்பதற்கு பதிலாக 21.06.2021 என அச்சிடப்பட்டுள்ளது. தேதியைக் கூட சரி பார்க்க முடியாத அளவிற்கு ராமநாதபுரத்தில் பா.ஜ.கவினர் பரபரப்பாக பணியாற்றுகிறார்கள் போலும்.

டைம் ட்ராவல் மூலம் 2021ல் இருந்து 2023க்கு கடந்து வந்து பா.ஜ.கவினர் யோகாவும், மோடியின் சாதனை கூட்டமும் நடத்தும் அளவிற்கு டெக்னாலஜியில் பா.ஜ.கவினர் சீனாவை மிஞ்சிவிட்டதாக எதிர்கட்சியினர் கிண்டல் அடித்து செல்கின்றனர்.

- கு.விவேக்ராஜ்.

BJP
Memes : தினமும் PM Modi 2 மணிநேரம் மட்டுமே தூங்குவார் - பாஜக தலைவர்
Timepass Online
timepassonline.vikatan.com