ஒலிம்பிக்ஸில் ஒரு 'சதுரங்க வேட்டை'

ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியின் ஆதிக்கம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரின் ஆட்கள் தன் ஆணுறுப்பை கட்டிப்போட்டு பெண் என்று சொல்லி ஏமாற்றி போட்டியில் பங்கேற்க வைத்தனர் என்று சொல்லி அதிர வைத்தார்.
ஸ்டெல்லா வால்ஷ்
ஸ்டெல்லா வால்ஷ்
Published on

ஒலிம்பிக்ஸ் என்றாலே தகுதி திறமை வெற்றி என்றுதான் நினைப்போம். ஆனால் எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவும் கில்லாடிகள் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு சில..

ஸ்டெல்லா வால்ஷ்

அமெரிக்காவின் ஸ்டெல்லா வால்ஷ் தன் நாட்டுக்காக ஓடி 21 உலக சாதனைகளை நிகழ்த்தியவர். 1980 இல் ஒரு தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

ஸ்டெல்லா வால்ஷ்
ஸ்டெல்லா வால்ஷ்

உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்டெல்லா முழுமையான பெண் கிடையாது. அவருக்கு ஆணுறுப்பு இருந்தது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்.

ஃப்ரெட் லார்ஸ்

1904 இல் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் அமெரிக்கா சார்பில் கலந்து கொண்ட இவர் தன்னுடன் பங்கேற்ற மற்ற வீரர்களை விட விரைவாக பந்தயத்தை கடந்து அசத்தினார். அவர் முதலாவதாக வருவதை காண அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்டின் மகள் ஆலிஸ் காத்திருந்து வாழ்த்தினார்.

பரிசு கொடுக்கப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக போட்டியாளர்களை ஏமாற்றி ஃப்ரெட் லார்ஸ் வெற்றிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டப் பந்தயத்தில் ஓடி வரும் வழியில் வந்த ஒரு காரை நிறுத்தி அதில் ஏறி 11 மைல்கள் பயணித்து வந்திருக்கிறார்.

டோரா ராட்ஜென்
டோரா ராட்ஜென்

டோரா ராட்ஜென்

1936 இல் பெர்லின் ஒலிம்பிக்ஸில் டோரா ராட்ஜென் என்ற பெண் உயரம் தாண்டும் போட்டியில் கலந்துகொண்டார். அதன் பின் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு ஹோட்டலில் ஹெர்மன் ராட்ஜென் என்ற ஆண் பெயரில் அவர் சர்வராக பணிபுரிந்து கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் ஜெர்மனியின் ஆதிக்கம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரின் ஆட்கள் தன் ஆணுறுப்பை கட்டிப்போட்டு பெண் என்று சொல்லி ஏமாற்றி போட்டியில் பங்கேற்க வைத்தனர் என்று சொல்லி அதிர வைத்தார்.

- சீலன்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com