Rewind : 'Bye.. Bye.. மக்களே' - விடைபெறுகிறது உங்கள் டைம்பாஸ்

டைம்பாஸ் வார இதழ் நின்றபோது, அன்பு வாசகர்களுக்கு ஆசிரியர் எழுதிய கடிதத்தை ஒருமுறை திரும்பிப் படித்து பார்ப்போமா?
டைம் பாஸ்
டைம் பாஸ்

இணையமே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் இதயமாகிப் போன காலம் இது! சில விஷயங்கள் இந்த இணையக் காலத்தில் தவிர்க்க இயலாததாக ஆகிவிடுகின்றன. அதில் ஒன்று உங்கள் டைம்பாஸ் வார இதழ் இனி வாரம் தோறும் புத்தகமாக வெளிவரப் போவதில்லை. ஷாக் ஆக வேண்டாம் மக்களே..!

அதற்குப் பதிலாக 'டைம்பாஸ் ஆன்லைன்' என்ற முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களின்வழி உங்கள் டைம்பாஸ் உங்களோடே இணைந்தே பயணிக்கப்போகிறது. இணையத்தில் டைம்பாஸை இன்னும் மெறுகேற்றி விலையில்லா செய்திகளாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக புத்தக வடிவில் ஒரு குழந்தையாக தமிழ் வாசகர்களின் கரங்களில் தவழ்ந்த டைம்பாஸ் இதழ் இனி இணையத்தின் வழி தொடர்ந்து உங்கள் இணைப்பிலேயே இருக்கும்.

'டைம்பாஸுக்கு எல்லாம் பாஸ்' என்ற வாசகத்துக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு பத்திரிகையாக அரசியல், சினிமா, இணையம், தொழில்நுட்பம் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவைகள் வரை வகைதொகையின்றி வாரி வழங்கிய டைம்பாஸ் இதழுக்கு வாசகர்களாக நீங்கள் அளித்த மிகப் பெரிய ஆதரவுக்கு நன்றிகள்.

கூத்து, கேலி, கலாய் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து உங்கள் டைம்பாஸ் உங்களுடனே பயணிக்கும் என்பதை மீண்டும் நினைவுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்!

நன்றி, வணக்கம்

அன்புடன்

ஆசிரியர்,

டைம்பாஸ்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com