80'ஸ் தமிழ் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? - பாகம் 2

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? "அட ஆமாப்பா.." என்கிறீர்களா? அப்போ இங்கே இருக்கிற விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.
80'ஸ் தமிழ் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? - பாகம் 2

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? டிவியில் பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் இன்னும் ரசனையுடன் பார்ப்பவரா? "அட ஆமாப்பா.. ஆமா.." என்கிறீர்களா? அப்போ இங்கே இருக்கிற எல்லா விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.

  • வாட் 69னு ஒரு சரக்கு. அப்போது எல்லா படங்களிலும் பணக்காரர்கள் வீட்டில் தவறாமல் இருக்கும். அந்த சரக்கை குடிச்சதுக்கு அப்புறம் ஒரு கொலை பண்ணுவாய்ங்கெ இல்ல ரேப் பண்ணுவாய்ங்கெ. அவ்வளவு மோசமான சரக்கா சார் அது?

  • ஓகே பாஸ் இந்த டயலாக்கை இஞ்சி தின்னது போல முகத்தை வைத்துக் கொண்டு, தான் நடிக்கும் படங்களில் தவறாமல் பேசும் ஆர்.எஸ்.மனோகர் பெரும்பாலும் மொட்டை போட்டு நடித்திருப்பார். என்ன வேண்டுதலோ?

சங்கிலி முருகன் பல படங்களிலிருந்து இரும்புக்கை மாயாவி போல ரெண்டு கையிலும் பெரிய அகப்பையை மாட்டிக்கொண்டு, ஹீரோவை குத்திக்கொள்ள சண்டை போடுவாரே ஏன்ன்ன்ன்?

பெரும்பாலும் கறுப்பு பிரவுன் கலரில் மட்டுமே ஷூக்கள் பார்த்திருப்போம். ராமராஜன் அதில் விதிவிலக்கு. வெள்ளையில் பூ போட்ட டிசைன் பூக்களைத்தான் பிளாக் அண்ட் வொயிட் ஆளுங்க யூஸ் பண்ணி இருப்பாங்க. அந்த கம்பெனிகள் எல்லாம் இப்போ எங்க பாஸ் ?

- ஆர்.சரண்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com