80ஸ் தமிழ் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? - பாகம் 3

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? "அட ஆமாப்பா.." என்கிறீர்களா? அப்போ இங்கே இருக்கிற விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.
80ஸ் தமிழ் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? - பாகம் 3

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? டிவியில் பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் இன்னும் ரசனையுடன் பார்ப்பவரா? "அட ஆமாப்பா.. ஆமா.." என்கிறீர்களா? அப்போ இங்கே இருக்கிற எல்லா விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.


எம்ஜிஆரும் நம்பியாரும் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சண்டை போட்டாலும், கத்திகளை எக்ஸ் வடிவத்தில் வைத்தபடி ஒருவர் கழுத்தில் இருந்து மற்றவர்களுக்கு மாற்றி மாற்றி வைத்து சாரி நெருக்கமாக நின்றுகொண்டு வளைந்து சண்டை போடுவார்கள். என்ன வில்லத்தனமான கெமிஸ்ட்ரி இது?

ஜெயசுதா, சவுகார் ஜானகி, சுமித்ரா, ஸ்ரீவித்யா போன்ற நடிகைகளை மேக்கப் இல்லாம முதல் சீனில் காட்டினால் அடுத்த சீனில் கெட்டது நடக்கப் போகுதுன்னு அர்த்தம்.

குடிசை வீட்டில் இருந்தால் குடும்பத்தோடு கொளுத்தி விடுவார்கள் அல்லது மழைநாளில் கணவர் ரத்த சகதியில் விழுந்து சாகும் அதே நேரத்தில் பாழடைந்த கோவில் மணிகள் காற்றில் ஆட, இடி மின்னல் முழங்க, குவா குவா என்ற சத்தம் எழுப்பும் குட்டி ஹீரோவை டெலிவரி செய்வார்கள்.

'காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்' பாடல் காட்சியில் ஹீரோயின் பக்கத்தில் நிற்கிற சுகுமாரி கையில் ஒரு குடை வச்சிருப்பாங்க. அது காத்துல பறந்து போக எல்லாரும் அது பின்னாடியே ஓடுவாங்க. ஆனா, அந்தக் குடையை முன்னாடி யாரோ இழுத்துட்டு ஓடுவது அப்பட்டமாக தெரியும். எனி எடிட்டிங் மிஸ்டேக்?

ராதா காலத்திலே இருந்து சுகன்யா காலம் வரைக்கும் டூயட் பாடும் ஹீரோ கேன்வாஸ் ஷூ போட்டு அட, மொட்டை பாறை முதல் இமயமலை வரை ஹீரோயின்ஸ் மட்டும் செருப்பு போடாம ஆடுவாங்க. எதுவும் நேத்திக் கடனா?

- ஆர்.சரண்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com