leo
leo timepassonline
சினிமா

Leo Review : லியோ vs பார்த்திபன்; LCU வா? யார் யார் வரா? - படம் எப்படி இருக்கு ?

டைம்பாஸ் அட்மின்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சாண்டி, அர்ஜுன், கௌதம் மேனன் போன்றோர் நடிப்பில் 'லியோ' திரைப்படம் வெளியாகியுள்ளது.

கதைச்சுறுக்கம்:

இமாச்சல் பிரதேசத்தில் உணவகம் வைத்திருக்கும் பார்த்திபனை தென்னிந்தியாவில் இருந்து வரும் ஒரு தாதா கும்பல், 'நீதான லியோ?'னு கேட்டு தொந்தரவு செய்கிறது. பார்த்திபன் அதை மறுக்க அவரின் குடும்பத்தைத் தொந்தரவு செய்கிறது அக்கும்பல். உண்மையிலேயே லியோ யார்? பார்த்திபன் யார்? இருவரும் ஒருவரா? போன்ற கேள்விகளுக்குக் காண பதில் தான் 'லியோ'.

ப்ளஸ் :

விஜய் - த்ரிஷாவுக்கு இடையிலான காதலும், சின்ன சின்ன காமெடிகளும், நல்ல ஆக்‌ஷனும் என முதல் பாதி நன்றாகவே க்ளிக் ஆகியிருக்கிறது.

படம் முழுவதுமே க்ளாஸியான அனிருத்தின் இசை.

ஆக்‌ஷன் காட்சிகள், ஷேஸிங் காட்சிகள் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஒளிப்பதிவாளர் க்ளாப்ஸ் வாங்குகிறார்.

லோகேஷின் பிரதியேகமான 'விஜய்' ஆகவும், ரசிகர்களுக்கான விஜய் ஆகவும் மாஸ் செய்திருக்கிறார் விஜய்.

ஹைனா சண்டை மற்றும் அது தொடர்பான காட்சிகள்.

மைனஸ்:

பின்கதையில் கொஞ்சம் கூட நம்பகதன்மையே இல்லை. உங்க யுனிவர்ஸ்ல மட்டும் எப்படி சார் இதெல்லாம் நடக்கும் என கேட்க வைக்கிறது.

இரண்டாம் பாதி திரைக்கதை கண்டமேனிக்கு ஓடுகிறது. அதனால் முதற்பாதியில் இருந்த பிடிமான இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

தேவையில்லாம சேர்க்கப்படும் கதாபாத்திரங்கள் படத்திற்கு உதவவே இல்லை.

முடிவுமொரு ஃபுல் பேக்கேஜாக முதற்பாதி க்ளிக் ஆகிறது. தத்திதத்தி இரண்டாம் பாதி பாஸ் ஆகியிருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு ட்ரீட்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் சினிமா விமர்சனங்களைப் படிக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Please Click : https://bit.ly/3Plrlvr