'LCU: Lokesh Childhood Universe' - அது ஒரு டவுசர் காலம் | Epi 4

இந்த வாரம், தற்கால ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU-க்குள்ள, அதாவது Lokesh Childhood Universe-க்குள்ள போய் பாப்போம்.
Lokesh
Lokesh டைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

இந்த வாரம், தற்கால ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU-க்குள்ள, அதாவது Lokesh Childhood Universe-க்குள்ள போய் பாப்போம்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் எல்லாரும் விஜயகாந்த்திற்கு விசில் அடிக்கையில் லோகேஷ் மட்டும் மன்சூர் அலிகானுக்கு விசில் அடித்திருப்பார்.

'ஒரு ஊர்ல ஒரு பாட்டி 1000 கிலோ ஹெராயின் போதைப் பொருள அரைச்சு காய வச்சு வித்திட்டிருந்தது. அப்ப அந்த பக்கமா வந்த Agent காக்கா அந்த 1000 கிலோ ஹெராயின கவ்விட்டுப் போய்டுச்சாம்..' என பரீட்சையில் பதில் தெரியாமல் கதை கதையாக எழுதியிருப்பார்.

பால்வாடில இருந்து பனிரெண்டாங் கிளாஸ் வரைக்கும், அவர் எந்த ஸ்கூல் மாறுனாலும், அதே டீச்சர்ஸ், அதே ப்ரெண்ட்ஸ், அதே மாணவர்கள், அதே வாட்மேன்தான் இருந்திருப்பாங்க. ஏன்னு அவர்க்கிட்ட கேட்டா, "இது LCU (Lokesh Classroom Universe)"னு சொல்லியிருப்பார்.

Lokesh
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பிரியாணி வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடித்திருப்பார்.

'பிரியாணி வாங்கித் தரேன்"னு சொல்லி, குழந்தையான இவரை பலமுறை கடத்தி இருப்பார்கள்.

சக மாணவர்கள் எல்லாரும் 'போக்கிரி பொங்கல்'னு Vibe பண்ணிட்டிருக்கும்போது, இவர் மட்டும் 80களில் வெளியாகி, விக்ரவாண்டி ஹோட்டல்களில் மட்டுமே ஓடிக்கிட்டிருக்க பாட்டுகளைக் கேட்டு Vibe பண்ணிட்டிருப்பார்.

அப்பாவின் 'ரோலக்ஸ்' வாட்சைக் கட்டிக்கொண்டுதான் ஸ்கூலுக்கு செல்வேன் என்று அடம்பிடித்திருப்பார்.

Night effect-ஐ அதிகம் விரும்பும் இவர், காலை ஒன்பது மணிக்கு பதிலாக இரவு ஒன்பது மணிக்கு ஸ்கூல் சென்றிருப்பார்.

Lokesh
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

"ஸ்கூலுக்கு வேன்ல போறீயா? இல்ல சைக்கிள்ல போறீயா?" என்று பெற்றோர்கள் கேட்டால், "மஞ்ச லாரில போறேன்" என்று பதில் சொல்லி பதற வைத்திருப்பார்.

எந்த பாடத்தில் இருந்து கேள்வி கேட்டாலும், கணக்கு, ஆங்கிலம், தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லா பாடங்களையும் கலந்துக்கட்டி, பதில் அளித்திருப்பார். டீச்சர் கேட்டால், "இது LEU (Lokesh Exampaper Universe)" என்று விளக்கம் கொடுத்திருப்பார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com