Adipurush  timepass
சினிமா

Adipurush : தமிழ்நாட்டில் ஆதிபுருஷ் - மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

படத்துக்கான பட்ஜெட் கம்மியா இருந்து படத்துடைய மதிப்பும் தரமும் அதிகமா இருக்குன்னா, அந்த படத்துக்கு தமிழக மக்கள் மத்தியில வரவேற்பு அதிகமாகவே இருக்கு.

டைம்பாஸ் அட்மின்

பாகுபலி பிரபாஸ் நடிச்ச Pan இந்திய திரைப்படமான ஆதிபுருஷ் இன்னிக்கு தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகள்ல இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணம் கதைய தழுவின திரைப்படம். இந்த படத்துல பிரபாஸ்க்கு ஜோடியா க்ரித்தி சனோன் நடிச்சியிருக்காங்க.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஆதிபுருஷ் பட தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு காட்சிளயும் அனுமாருக்காக ஒரு சீட் ஒதுக்கணும்னு சொன்னது மக்களுடைய கவனத்த ஈர்த்துச்சு.

அனுமாருக்கு சீட்டு ஒதுக்கணும்னு சொன்னது கவனத்த ஈர்த்ததால, படத்துக்கும் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கும்னு நெனச்ச பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏமாற்றம்னு தான் சொல்லனும் .

படக்குழுவினர் எதிர்பார்த்த மாதிரி தமிழகத்துல ஆதிபுருஷ் படத்துக்கான வரவேற்பு கிடைக்கல. தெலுங்கு மற்றும் ஹிந்தியில ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைச்சிருக்கு.

மற்ற மாநிலங்கள்ல ஆதிபுருஷ் படத்துக்கான முன்பதிவு சூடுபிடிச்சிருக்கு.. ஆனா தமிழ்நாட்டுல முன்பதிவு மற்றும் ஆன்லைன் புக்கிங் ரெண்டுமே விற்பனை ஆகல.. கடைசி நேரத்துல தியேட்டர்ல போய் டிக்கெட் கேட்டாலும் தாராளமா கொடுக்கக்கூடிய சூழ்நிலைல தான் ஆதிபுருஷ் படம் நம்ம ஊருல போய்ட்டு இருக்கு.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில ஆதிபுருஷ் திரைப்படம் ஏன் வரவேற்பு பெறல ? அப்படின்ற காரணத்தை யோசிக்கும் பொழுது தமிழக மக்கள் படத்துல நல்ல தரத்தை எதிர்பாக்குறாங்க.. கூடவே நல்ல கதை இருக்கணும்னு எதிர்பாக்குறாங்க.

படத்துக்கான பட்ஜெட் அதிகமா இருந்து, கதை பழையதுனா வரவேற்பு குறைவா தான் இருக்கு.. இதுவே படத்துக்கான பட்ஜெட் கம்மியா இருந்து படத்துடைய மதிப்பும் தரமும் அதிகமா இருக்குன்னா, அந்த படத்துக்கு தமிழக மக்கள் மத்தியில வரவேற்பு அதிகமாகவே இருக்கு.

ஆதிபுருஷ் திரைப்படம் பொறுத்தவரைக்கும் டீசர் வெளியானதுல இருந்தே தமிழக மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு இல்ல. அனுமாருக்கு ஒரு சீட் ஒதுக்கணும்னு சொன்னப்பவே ஒரு சீட்டில் ஒட்டு மொத்த சீட்டுமே எடுத்துக்கோங்கனு ட்ரோல் பண்ணவங்க தான் நம்ம தமிழ்நாட்டு மக்கள் !