Adipurush : அனுமானுக்கு ஒரு சீட் ரிசர்வ்ட் - நெட்டிசன்ஸ்களின் ரகளை கமெண்ட்ஸ் !
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிச்சிருக்க ஆதிபுருஷ் திரைப்படம் வர 16ஆம் தேதி தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகப்போகுது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தினு ஐந்து மொழிகள்லயும் ரிலீஸ் ஆகப்போகுது. ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை தழுவின படம். ராகவாவா பிரபாஸ், ஜானகியா கிருதி சனோன், லங்கேஷா சைஃப் அலி கான், லட்சுமணனா சன்னி சிங், பஜ்ரங்கா தேவதத்தா நாகே, இந்திரஜித்தா வத்சல் ஷெத் நடிக்கிறாங்க.
இந்த நிலையில, ராமாயணத்த தழுவி உருவாகியிருக்க இந்தப் படத்தோட ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர்ல ஒரு சீட்டை அனுமாருக்காக காலியா விடணும்னு ஆதிபுருஷ் பட தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் அறிவிச்சிருக்காங்க.
இந்த விசித்திரமான அறிவிப்புக்கு பல வகையான விமர்சனங்கள்ல நெட்டிஸன்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. பலவகையில மீம்ஸ் கிரியேட் பண்ணி ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க நெட்டிஸன்ஸ்.
இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்ஸ் கொடுத்து இருக்க சில பேஷ் பேஷ் கமெண்ட்ஸ பார்க்கலாம் !!
பேசாம தியேட்டரையே காலியா விட்டுட்டா வாணரக்கூட்டமே வந்து படத்தை பார்க்கும்ல !!
ஏண்டா ஒரு காட்சிக்கு ஒரு சீட்டுனா.. ஒவ்வொரு காட்சியும் பார்த்து அனுமாரே கன்ஃபியூஸ் ஆயிருவாரேடா !!
அனுமாரே உனக்கு ஒரு சீட்டு இல்ல, இருக்கிற எல்லா சீட்டு உனக்கு தான்.. தெலுங்கு படத்தை பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு தெம்பு இல்ல ராசா !!
அப்போ அனுமார் சீட்டுக்கு பக்கத்து சீட்டு எனக்கு. அனுமார் கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு !!
அடுத்து என்ன உள்ள செருப்பு போட்டு வரக்கூடாது, snacks counter ல veg only, இடைவேளையில பிரசாதமா…
அப்ப அந்த சீட்டுக்கு ஏசி மற்றும் பாப்கான் வசதி உண்டா ??
தியேட்டர் காலியா இருக்கிறத பார்த்து சஞ்சீவி மலைய பேத்து எடுத்துட்டு போற மாதிரி, ஆஞ்சநேயர் தியேட்டரையும் பேத்து எடுத்துட்டு போயிடுவாருன்னு நினைக்கிறேன் !!
தியேட்டர்ல யாரும் வரலைனா இருக்கிற எல்லா சீட்டையும் ஆஞ்சநேயரே அப்பேஸ் பண்ணிட்டாருனு சொல்லுவிங்களாடா !!
இப்படி பலவிதமான கமெண்ட்ஸ்களையும் மீம்ஸ்களையும் கிரியேட் பண்ணி சமூக வலைத்தளத்தில பதிவிட்டிட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ்.