Adipurush
Adipurush timepass
சினிமா

Adipurush: 'ஏமிரா இதி? பொம்மை படமா இது?' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டைம்பாஸ் அட்மின்

ஆதிபுருஷ் டீசரை ட்ரோல் மெட்டீரியல் மாட்டிக்கிச்சு பங்கு என இணைய வாசிகள் வெச்சு செய்து வருகின்றனர்.

ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் உருவாகியுள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்பட டீசர், இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் அறிவிப்பிலிருந்தே ஆஹா.. ஓஹோ, தலைவரே எனப் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களின் முகம் டீசர் வெளியான அடுத்த கணமே “என்னபா இப்படி ஆகிருச்சு”என சுருங்கி விட்டது. அவ்வளவுதான் ட்ரோல் மெட்டீரியல் மாட்டிக்கிச்சு பங்கு என இணைய வாசிகள் வெச்சு செய்து வருகின்றனர்.

இப்படம் கோச்சடையான் பட தெலுங்கு வர்சனாக இருக்குமோ? என்ற ஐயத்தையும் கிளப்பியுள்ளனர். மேலும், பிரபாஸ் நடிகருக்குள் சோட்டா பீம் இறங்கிட்டதாக நெட்டிசன்கள் தாறு மாறாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆதிபுருஷ் டீசர் பேசும் பொருளாக மாறி வச்சு செய்யப்பட்டு வருகிறது. பொம்மை படம் எடுக்கற நம்மலாம் பேசலாமா கோபி என இணையத்தில் ஒரே ஃபன் தான்.

மேலும், இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படங்களான துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களும் பொங்கல் அன்று வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. எனவே, கலாய்க்க ஒன்றிணைவோம் வா உடன்பிறப்பே என்றவாறு பொன்னியின் செல்வன் ரசிகர்களும், துணிவு-வாரிசு ரசிகர்களும் மும்முனைத் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த டீசரில் நடிகர் பிரபாஸ் ஒரு ஆங்கிளில் பார்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் போல் இருப்பதாக கூறி, விடுவமா நாங்க என, அவரையும் சேர்ந்துக் கலாய்த்துத் தள்ளுகின்றனர் நெட்டிசன்கள்.

இப்படம் வெற்றி பெற சுட்டி டீவி ரசிகர்களும் சோட்டா பீம் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை வாரி வழங்கியுள்ளனர்.

டீசரையே வச்சு செய்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள் படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி வரட்டும்!.வரட்டும்!. என மரண வெயிட்டிங்கில் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

படம் வெளியான பின்பு தான் தெரியும், ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷமா? இல்லை; கோவிந்தா என்ற கோஷமா? என்று.

- ர. பிரேம் குமார்