Ajith
Ajith  timepass
சினிமா

Ajith World Tour: நேபாளம், பூடான், இந்தியாவைச் சுற்ற கிளம்பும் அஜித் குமார் ! | Vidamuyarchi

டைம்பாஸ் அட்மின்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் பைக்குகள் மீது பிரியம் கொண்டவர். அண்மைக்காலமாக பைக் சுற்றுப் பயணங்களில் அதிகம் ஈடுபாடுகாட்டி வருகிறார். பைக் ரைடில் தொடர்பாக அவர் வெளியிடும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகும். இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

அண்மையில், அஜித் குமார் அடுத்து நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. மகிழ்திருமேனி இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த பைக் பயணம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அஜித் குமார். இந்த முறை, இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளையும் சுற்றவுள்ளார். நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்த அறிவிப்பை பகிர்ந்துள்ளார். சுற்றுலா செல்லவுள்ள பகுதி குறித்த மேப் இணையத்தில் வைரலாகி வருகிறது.