Guinness
Guinness Guinness
சினிமா

Guinness : ஒரே வருடத்தில் 777 திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்து கின்னஸ் சாதனை !

டைம்பாஸ் அட்மின்

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான சக்கரியா ஸ்வோப் என்பவர் ஒரு வருடத்தில், ஒரு திரையரங்கில் அதிக படங்கள் பார்த்த சாதனையை முறியடித்துள்ளார். முந்தைய சாதனை 715 திரைப்படங்களாக இருந்த நிலையில் 777 திரைப்படங்கள் பார்த்து இவர் அந்த கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

பெனிசில்வேனியாவைச் சேர்ந்த 32 வயதான சக்கரியா ஸ்வோப் என்பவர், கடந்த மே 2022 முதல் 2023 வரை சுமார், 777 திரைப்படங்களை இடைவேளை இல்லாமல் பார்த்து சாதனை புரிந்துள்ளார்.

முன்னதாக பிரான்சை சேர்ந்த வின்சென்ட் கிரௌன் 292 முறை "ஸ்பைடர்மேன்" திரைப்படத்தைப் பார்த்து மொத்தமாக 715 திரைப்படங்களை திரையில் பார்த்ததை உத்வேகமாக எடுத்துக்கொண்டு அவருடைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். 

சாக் தான் ஒரு திரைப்பட ஆர்வலர் என்றும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100-150 திரைப்படங்களை திரையரங்கில் பார்ப்பதாகவும் கூறுகிறார்.

முந்தைய சாதனையை முறியடிக்கும் முயற்சிக்காக அவர், 'மினியன் ரைஸ் ஆப் க்ரூ' தொடங்கி 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி' வரை பலதரப்பட்ட படங்களைப் பார்த்தார்.

800 படங்களை திரையரங்குகளில் காண சுமார் 1000 டாலர்கள் தேவைப்படும். ஆனால் ரீகல் சினிமாஸின் அன்லிமிடெட் மெம்பர்ஷிப்பை பயன்படுத்தியதன் மூலம் வெறும் 200-லிருந்து 300 டாலர்களே செலவானதாக சாக் கூறுகிறார். சாக் கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரீகல் சினிமாஸை தொடர்பு கொண்ட போது அவர்கள் நன்றாக ஆதரவளித்ததாக கூறுகிறார்.

இந்த சாதனையை அடைய அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என்று சாக் கூறிய போது, திரையரங்க ஊழியர்கள் ஒவ்வொரு திரையிடலின் போதும் அவரை உன்னிப்பாக கண்காணித்து அவர் இந்த சாதனையை வெற்றிகரமாக அடைய உதவி செய்தனர். திரைப்படங்களை பார்க்கும் போது தூங்கவோ அல்லது தொலைபேசியை பார்க்கவோ இல்லை சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் திரையரங்க ஊழியர்கள் அவரை பார்த்துக்கொண்டனர்.

தான் ஆறிலிருந்து இரண்டு மணி வரைக்கும் முழு நேர வேலை அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர் என்பதால் வார நாட்களில் இரண்டிலிருந்து மூன்று திரைப்படங்களைப் பார்க்க இயலும். வார இறுதி நாட்களில் தான் அதிக திரைப்படங்களைப் பார்க்க முடியும் என்கிறார். சக்கரியாவின் இந்த மூவி மாரத்தான் கின்னஸ் சாதனையைத் தாண்டி 'மனநல நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்' என்கிறார். ஜக்கரியாவின் இந்த கின்னஸ் சாதனையை முன்னிட்டு தற்கொலை தடுப்புக்கான அமெரிக்க கூட்டமைப்பிற்கு ரீகல் சினிமாஸ் 7,777.77 டாலர்களை கொடையாக வழங்கியுள்ளது. 

- சையத் சஜானா.பா