அந்நியன்
அந்நியன் timepass
சினிமா

அந்நியன் - விக்ரம் : அம்பி செய்த 'காரியத்தைக்' கவனிச்சீங்களா ?

Saran R

அந்நியன் படம் பார்த்திருப்பீங்க சரி... அம்பி செய்த இந்த 'காரியத்தைக்' கவனிச்சீங்களா..?

க்ளைமாக்ஸ்ல அவருக்கு இருந்த 'Multiple personality disorder' எனும் குறைபாடு எல்லாம் சரியாகி அம்பி, தன் காதல் மனைவி நந்தினியுடன் ரயிலில் ஊருக்குப் போயிட்டு இருப்பார். ரயிலில் சரக்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு மீசை ஆசாமியைப் பார்த்து கோபப்படுவார் அம்பி. போனில் பேசிக் கொண்டிருந்த நந்தினி, எதிரே இருந்த மீசை ஆசாமியையும் தன் கணவரையும் காணவில்லை என பயந்தபடி ஓடிப்போய் பார்ப்பார்.

கதவருகே கூலாக காற்று வாங்கிக் கொன்டிருப்பார் அம்பி. ஆனால், அந்த மீசைக் காரரை கொலை செய்து ரயில் பெட்டியின் வெளிப்பக்கம் தொங்கவிட்டிருப்பார் அம்பி. ஏன் இந்த கொலவெறி?

அந்நியன் இன்னும் அவருக்குள் இருக்கிறான் என்பதாலா..? நாம் அப்படித்தான் படத்தின் க்ளைமாக்ஸ் இருந்ததாக  நினைத்து 'உச்' கொட்டிக் கொண்டே ஹாரிஸ் ஜெயராஜின் டைட்டில் கார்டு பி.ஜி.எம்மையும் முணுமுணுத்துக் கொண்டே பைக் ஸ்டாண்ட் வந்தோம்.

ஆனால், அம்பி சிறு வயதில் விபத்தில் மறித்துப்போன தன் தங்கையின் சாவுக்கு பழி வாங்கவே அதைச் செய்தார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? 'எனக்கு இது அல்ரெடி தெரியும்!' என்பவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.

'அட, ஆமால்ல!' என ஆச்சர்யத்தில் வாய் பிளப்பவர்கள் மேலும் படியுங்கள்.  அம்பி சரியாகிவிட்டான் தான். ஆனால், தன் தங்கையின் சாவுக்கு மறைமுகக் காரணமாக இருந்த மின்சார வாரிய லைன் மேன் அன்று ஒழுங்காக சரக்கடிக்காமல் வேலை பார்த்திருந்தால் இந்தத் துயர சம்பவமே நடந்திருக்காதே!

'இன்னிக்கு அதே லைன்மேன் வயசாகியும் திருந்தாம ட்ரெய்ன்ல சரக்கடிச்சுட்டு இருந்தா சும்மா விடுவேனா..? அதான் போட்டுத் தள்ளிட்டேன்!' என்று அம்பியின் மைண்ட் வாய்ஸ் சொல்வது உங்களுக்குக் கேட்டுச்சா..?