'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

புவனா ஒரு கேள்விக்குறி பாராட்டு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஜினிகாந்த் மேடையில் வந்ததும் ஆரவாரித்து கைதட்டினார்கள். மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்ட ரஜினி கண்ணீர் சிந்தினார்.
ரஜினி
ரஜினிடைம்பாஸ்

"எனக்கு சினிமா சரிப்பட்டு வராது. நான் பெங்களூருக்கேப் போறேன் சிவக்குமார் சார்!" - இப்படிச் சொன்னது வேறு யாருமல்ல...நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இதோ சிவக்குமாரின் அந்நாள் பேட்டி ஒன்றில் ரஜினி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று கேளுங்கள்...சிலிர்ப்பாய் இருக்கும்!

"சூப்பர் ஸ்டார்...அன்று சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி நான் நடித்த 'கவிக்குயில்' படத்தில் நடிக்க கர்நாடகாவின் சிக்மகளூர் வந்திருந்தார். பெரும்பாலும் மௌன சாமியார் தான். பேசவே மாட்டார். தயக்கம் அவர் அணிந்த மேலாடை.

ரஜினி
தமிழ் சினிமாவை உலுக்கிய லெட்சுமி காந்தன் கொலை வழக்கு - பழைய பேப்பர் கடை | Epi 9

தேவராஜ் அர்ஸ் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தபோது, கவியரசு கண்ணதாசனுக்கு பெங்களூரில் பாராட்டுவிழா ஒன்றை அவர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணதாசன் எல்லோருக்கும் பிரியமானவர்...வேண்டப்பட்டவர் என்பதால், 'தமிழ் திரையுலகமே கலந்து கொள்கிறது' என விளம்பரப்படுத்திவிட்டார்கள்.

விழாவுக்கு முதல்நாள் கணக்கெடுத்தபோது, கமல்ஹாசன், மனோரமா போன்ற இன்னும் ஒரு சிலரே வருவார்கள் என்று அறிந்த கவிஞர் கண்ணதாசன், திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளரும் கவிஞரின் உறவினருமான பஞ்சு அருணாச்சலத்துக்கு போன் செய்து, 'நம்ம படப்பிடிப்பில் உள்ள கலைஞர்களையெல்லாம் அழைச்சிட்டு வந்துடு!' என்று சிக்மகளூருக்குத் தகவல் தந்தார்.

1977- ஆண்டு ஜனவரி 9 பிற்பகல் 2 மணிக்கு ரஜினி, செந்தாமரை, பஞ்சுவுடன் சிக்மகளூருவிலிருந்து பெங்களூருவுக்குக் காரில் பயணமானேன். என்னுடன் ரஜினி காரில் பேசவே தயக்கத்தோடு இருந்தார். ரொம்பவே மரியாதை கொடுத்தார். அவரை என் அருகில் அமர வைத்துக்கொண்டு பயணமானேன். 10 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நான்கு மணி நேரப் பயணத்தில் ரஜினியிடம் விரிவாகப் பேசிக்கொண்டே வந்தேன்.

ரஜினி
'கண்ணதாசனை அடிக்கத் துரத்திய சிவாஜி!' பழைய பேப்பர் கடை | Epi 6

ஒருவார்த்தைகூட இடையில் பேசாமல், கேட்டுவந்தார் ரஜினி. பெங்களூர் கூட்டத்தில் கமலும் மனோரமாவும் பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டனர். கவிஞரின் ஆற்றல் பற்றியும் பாடல், கவிதைகளின் வீச்சு பற்றியும் 15 நிமிடங்கள் பேசிவிட்டு இறங்கினேன்.

ரஜினிக்கு ஒரே வியப்பு. 'எங்க ஊரில் வந்து இத்தனை ஆயிரம்பேர் மத்தியில் இப்படி கைதட்டல் வாங்குகிறீர்களே...உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. தமிழ் உங்கள் நாக்கில் தாண்டவமாடுது சார்!' என்றார்.

'அண்ணா, கலைஞர், கவிஞர் பேச்சை நீங்கள் கேட்டது இல்லையா ரஜினி? இனி கேளுங்கள்!' என்றேன்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வழக்கமாக ஹீரோவாக நடிக்கும் நான் பெண் பித்தனாக நடித்திருந்தேன். ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். அதுவும் ரஜினி அதில் காதல் தோல்வி ஹீரோ. வாசு ஸ்டூடியோவில் பஞ்சு அருணாச்சலத்தின் நீண்ட வசனங்களைப் பேசி நடிக்க, மொழிப்பிரச்னையால் மிகவும் சிரமப்பட்டார். ஷூட்டிங்கின் போது ஓர்நாள் என் வீட்டுக்கு அவரை இரவு உணவுக்கு அழைத்துச் சென்றேன்.

ரஜினி
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

'எனக்கு சினிமா சரியா வராது போல. பெங்களூருக்கே திரும்பப் போயிடுறேன்' என்று அன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிடும்போது சொன்னார். 'ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களுக்கும் ஏற்படும் குழப்பம்தான் ரஜினி. காலப்போக்கில் சரியாகிவிடும்?' என்றேன். சமாதானம் ஆகாமல் கிளம்பிச் சென்றார்.

புவனா ஒரு கேள்விக்குறி எதிர்பார்த்ததைவிட நல்ல ஓட்டம். செங்கல்பட்டு செயிண்ட் பிரான்சிஸ் பள்ளியில் புவனா ஒரு கேள்விக்குறி படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஜினிகாந்த் மேடையில் வந்ததும் ஆரவாரித்து கைதட்டினார்கள். மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்ட ரஜினி கண்ணீர் சிந்தினார்.

வெற்றி தேவதை அன்று என் நண்பர் ரஜினியை ஆக்கிரமித்து அணைத்துக் கொண்டாள். இன்றும் அவள் அரவணைப்பில் இருக்கிறார் என் அன்பு ரஜினி!" என்று சொல்கிறார் நடிகர் சிவக்குமார்!

(தூசு தட்டுவோம்..!)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com