பிக்பாஸ்னாலே ஒரு நாடகக் கூடம். அப்படிப்பட்ட நாடகக் கூடம் சீசன் 6 உடைய ட்ரெண்டிங் கன்டெஸ்டென்ட்டில் Azeemவும் ஒருத்தர்.
சின்னத்திரை நடிகரான Azeem 1995 டிசம்பர் 15இல் சென்னையில் பிறந்தவர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த Azeem, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல்ல இருந்து ஒரு பேசக்கூடிய செலிப்ரட்டி ஆகிட்டார். அப்படிப்பட்ட செலிபிரட்டி Azeem பிக்பாஸ் சீசன் 6 உடைய குடும்ப உறுப்பினரா எப்படி ட்ரெண்ட் ஆனார்னு பார்ப்போம்.
Azeem அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வறது பாலாஜி முருகதாஸ் தான். தமிழ் மீது பற்று இருக்க ஒரே காரணத்திற்காக "எளிய தாயின் மகன்" அப்படினு சொல்லிட்டு செந்தமிழிலேயே சண்டை போடுறதுல Azeem ஸ்பெஷலிஸ்ட்.
"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று"
- என்ற திருக்குறள் எல்லாம் தமிழ் பற்று இருக்க Azeem படித்ததில்லை போல. ஏன்னா பிக்பாஸ் வீட்ல ஏதாவது ஒரு சண்டை நடந்தால் அந்த சண்டையோட கோபத்தை மனதிலேயே வைத்துக்கொண்டு, எப்பவோ நடந்த சண்டையை எல்லாம் மறுபடியும் தோண்டி, ஒரு புது சண்டையா போடுறதுதா Azeemவோட வேலையே.
பிக்பாஸ் வீட்ல Azeem அடுத்த முக்கிய வேலை மற்ற குடும்ப உறுப்பினர்களை தாழ்த்தி பேசி ட்ரெண்டிங் ஆகுறதுதான். இப்படியும் ட்ரெண்டிங் ஆகலாம் அப்படின்றதுக்கு எடுத்துக்காட்டு Azeemதான்.
என்னதான் Azeem ஆரம்ப காலங்களில் Actor, VJ, Anchorனு தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தாலும், வார வாரம் ப்ரோமோ கன்டென்ட் கொடுத்து மற்ற பிக்பாஸ் சீசன் எல்லாத்தையும் பீட் பண்ணி சீசன் 6 ஓட ப்ரோமோ கிங் ஆனதெல்லாம் எப்பவுமே எவர் கிரீன் கன்டன்ட்தான்.
மற்ற குடும்ப உறுப்பினர்களோட சண்டை போட்டாலும், "இந்த பவுரு களத்துல இறங்கிட்டான்டா"னு சண்டைப் போட ஆரம்பிச்சு, இறுதியில மற்ற குடும்ப உறுப்பினர்களே, "நியாயம்னா Azeemதான்ப்பா"னு சொல்லி, விட்டா போதும்டா சாமின்னு ஓடிடுவாங்க.
வாரம் முழுக்க புலியா இருந்தாலும் வார இறுதியில எலி ஆகிடுவாறு நம்ம Azeem. ஏன்னா அப்பதான் நம்மவர் 'அகத்தின் வழியே..'னு துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பண்ணுவாரே. இப்படியெல்லாம் ட்ரெண்ட் ஆன ப்ரோமோ மன்னன் Azeem இந்த சீசன் டைடில் வின்னர் ஆவாரா அப்படின்னு அவருடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.