Aaradhya டைம்பாஸ்
சினிமா

Aaradhya Bachchan : பொய்யான தகவல் வெளியிட்ட யூடியுப் சேனல்கள் - நீதிமன்றம் போட்ட தடை !

இந்த வீடியோவ அகற்ற சொல்லி பச்சன் குடும்பம் சார்பா youtubeக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கு, இருந்தாலும் கோர்ட்டு ஆர்டர் இல்லாம வீடியோவ அகற்ற முடியாதுனு யூடியூப் தரப்பில் சொல்லி இருக்காங்க.

ராதிகா நெடுஞ்செழியன்

அமிதாப் பச்சனுடய 11 வயது பேத்தி ஆராத்யா பச்சனைப் பத்தி தவறான வீடியோக்களைப் பரப்பவோ ஒளிபரப்பவோ யூடியூப் சேனலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிச்சிருக்கு. நீதியரசர் சி.ஹரி சங்கர், ஒவ்வொரு குழந்தையும் அது பிரபலங்களுடய குழந்தையா இருந்தாலும் சரி, சாமானியரோட குழந்தையா இருந்தாலும் சரி, மரியாதையோட நடத்தப்பட்றதுக்கான உரிமை உண்டுனு நியாயப்படுத்தினாரு.

அதுமட்டுமில்லாம, குற்றவாளிகள் யாருனு பச்சன்கிட்ட வெளிப்படுத்த கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவும் போட்டிருக்காங்க. யூட்யூப் உரிமை நிறுவனமான கூகுள், இந்த மாதிரியான விதிமீறல்கள்ல சரிபடுத்துற மாதிரியான திருத்தங்களை கொண்டு வரணும்னு பரிந்துரைச்சியிருக்காங்க.

ஒரு பிரபலத்த பத்தி இந்த மாதிரியான தவறான தகவல்கள் வெளிய வர்றது பழக்கப்பட்ட ஒன்னு, ஆனா அந்தப் பிரபலத்துடைய குழந்தைக்கும் இந்த மாதிரியான அச்சுறுத்தல் வரது, குழந்தைகள் மேல மோசமான வக்கிரத்தை பிரதிபலிக்கிதுனு நீதிமன்றம் எச்சரிச்சாங்க..

பச்சன் குடும்ப பெயரை கெடுக்கிற இந்த மாதிரியான உள்ளடக்கம் வெளியிடப்பட்றத தடுக்க, ஆராத்யா பச்சனும் அபிஷேக் பச்சனும் சில யூடியூப் சேனல்கள் மேல மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. ஆராத்யாவுக்கு உடல்நிலை சரியில்லைனும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதாவும் யூடியூப்பில் பல வீடியோக்கள் வந்ததா பச்சன் மற்றும் குடும்பத்தினர் சொன்னாங்க.

எல்லாத்துக்கும் மேல ஒரு வீடியோல ஆராத்யா பச்சன் இறந்து போயிட்டதாவும் சொல்லி இருக்காங்க. குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பை வழங்க பச்சன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலனும் வீடியோக்கள் போடப்பட்டிருக்கு..

இந்த நிலையில, ஆராதியாவுக்கு உடல்ல எந்த குறைபாடும் இல்லை, அவங்க மருத்துவமனையில அனுமதிக்கப்படலனு மனுல சொல்லியிருக்காங்க. விசாரணை அப்போ, நீதிபதி சங்கர் இந்த மாதிரியான உள்ளடக்கத்த பதிவிடும்போது பொறுப்போட செயல்பட மாட்டாங்களா ? இப்படி குழந்தைகள பத்தி அவதூறு பரப்பும்போது அவங்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிச்சிருக்க மாட்டாங்களா?னு கேள்வியும் எழுப்பியிருக்காரு.

ஆராத்யா தரப்புல ஆஜரான மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிற இந்த உள்ளடக்கம் தொடர்பா எல்லாருமே தகுந்த கவனத்தோட செயல்படுவதற்கான தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) விதிகள குறிப்பிட்டாரு.. ஆராத்யா பத்தி பதிவிடப்பட்டிருக்க வீடியோ, பச்சன் குடும்பத்த அவமதிக்கிற மாதிரியும், தனியுரிமைய மீறுவதாவும் மனுல சொல்லியிருக்காங்க..

ஆராத்யா மற்றும் அவங்க குடும்ப உறுப்பினர்களோட படங்கள் மார்பிங் செய்யப்பட்டு, தவறான தகவல்களோட பரப்பி, லாபம் பார்க்க, தவறாக யூஸ் பண்றதாவும் நீதிமன்றத்துல சொல்லியிருக்காங்க.

இந்த வீடியோவ அகற்ற சொல்லி பச்சன் குடும்பம் சார்பா youtubeக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கு, இருந்தாலும் கோர்ட்டு ஆர்டர் இல்லாம வீடியோவ அகற்ற முடியாதுனு யூடியூப் தரப்பில் சொல்லி இருக்காங்க.

சட்டவிரோத வீடியோக்கள அப்லோட் பண்ணவங்க விவரங்கள்ல, நீதிமன்ற உத்தரவுக்கு அப்புறம்தான் தரமுடியும்னு யூடியூப் சொல்லி இருக்காங்க. எனவே, 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரப்பட்டிருக்கு..

ஆராத்யா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் தரப்புல மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பிரவின் ஆனந்த், அமீத் நாயக், வைஷாலி மிட்டல், மது கடோடியா, சித்தாந்த் சமோலா, ஷிவாங் ஷர்மா, ஹெர்ஷ் தேசாய், பல்லவி பட்நாகர், மேகா சந்திரா, ஹர்ஷ் ஜா, சுஜோய் முகர்ஜி, தாரிணி குல்கர்னி ஆகியோர் ஆஜராகி வாதாடினாங்க.

கூகுள் சார்பா வழக்கறிஞர் மம்தா ராணி ஜா ஆஐர் ஆனாங்க..