Vijay  Vijay
சினிமா

Vijay : 'நீ வருவாய் என 2 கதை ரெடி; விஜய் சார் பையன் ஹீரோ' - இயக்குநர் ராஜகுமாரன் பேட்டி

Zulfihar Ali

இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன் டைம்பாஸ் யூட்யூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணல்.

'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படம் பண்றப்பவே நானும் அஜீத் சார் கொஞ்சம் க்ளோசாயிட்டோம். அதனால அவர்கிட்ட அப்பவே ஒரு அப்ளிகேஷன் போட்டு வச்சேன். அஜீத் சாரும் அப்ப அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. அதோட உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் பண்றப்பவே நான் அடுத்து டைரக்டர் ஆயிடுவேன் அப்படிங்கிறது உறுதி ஆயிடுச்சு.

அதுக்கப்புறம் விக்ரமன் சார்ட்ட அஜீத் சார்ட்ட கதை சொல்லணும்னு சொல்லவும் அவரு ரெக்கமண்ட் பண்ணாரு. ஒருநாள் சவுத்ரி சார்ட்ட அஜீத் சாருக்கு முதுகுத்தண்டுல ஆப்ரேஷன் பண்ணி அப்பல்லோ ஹாஸ்பிடல்ல இருக்காரு, வாங்க அவரை பார்க்க போவோம் அப்படின்னு அம்பாசடர்ல அவரையும் கூட்டிட்டு பாக்க போனேன்.

அங்க போய் அஜீத் சார்ட்ட, "கதை சொல்ல போறேன் சார். உங்க பார்ட்டு மட்டும் சொல்லவா, இல்ல முழு கதையையும் சொல்லவா" என்று கேட்டேன். அவரும் முழு கதையுமே சொல்லுங்க அப்படின்னதும் முதல்ல இருந்து சொல்ல வேண்டியதாயிடுச்சு. முதல் பகுதியில 'பார்த்து பார்த்து கண்கள் பூத்துப் போனேன்'னு பார்த்திபன் சார் வர்ற சீன்லலாம் அஜீத் சார்க்கு ரோல் இல்ல.

அந்த படத்த பொறுத்தவரைக்கும் அஜீத் சாரோட சீன் இன்டர்வெல்லுக்கு அப்புறம் தான் வரும். ஆனா நான் கதை சொல்றப்போ அவர் ரொம்ப ரசிச்சு சிரிச்சு சிரிச்சு கேட்டிட்டிருந்தாரு. அதைப் பார்த்து எனக்கு ஒரே ஷாக். என்ன இப்படி சிரிச்சிட்டு இருக்காரு, சிரிச்சு சிரிச்சு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா 'கதை சொல்லி கொன்னுட்டேன்' அப்படின்னு கெட்ட பேரு வரமேனி பயந்துட்டேன்.

"நான் சரக்கு, நீ உறுகாய்"

'திருமதி தமிழ்' படம் ரெடியானதும் என்னை ராமநாராயணன் சார் அவரோட படத்துல நடிக்க கூப்பிட்டார். நானும் பவர் ஸ்டார்ரும் முக்கிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறதாய் இருந்திச்சு. அந்த படத்தோட டைட்டில் 'நான் சரக்கு நீ ஊறுகா'. டைட்டில் கேட்டப்பவே எனக்கு அந்த படத்தில் நடிக்க அவ்வளவு விருப்பம் இல்லாத காரணத்தினால் எப்படியோ எஸ்கேப் ஆயிட்டேன். ஆனா எனக்கு அப்போ சூட்சமம் தெரியல. அந்த படத்துல ஒருவேளை நான் நடிச்சிருந்தா இன்னைக்கு நான் வேறொரு நிலையில இருந்திருப்பேன்.

அந்த படத்துக்கு அப்புறம் ராமநாராயணன் சார் இறந்துட்டார். ஒருவேளை நான் அந்த படத்துல நடிச்சிருந்தேன்னா '100 படங்களை எடுத்த ராமநாராயணன் சார்ர ஒரே படத்துல ராஜகுமாரன் கொன்னுட்டான்' அப்படின்னு சொல்லி இருப்பாங்க. இந்த விஷயம் தான் அஜீத் சாரிடம் கதை சொல்றப்போ ஞாபகம் வந்திச்சு. ஆனா அஜீத் சார் ஒரு சீன்ன ரெண்டு மூணு வாட்டி திரும்பத் திரும்ப சொல்ல கேட்பார். அவர் ஒரு சிறந்த ரசிகன். அந்தப் படத்துல அஜீத் சார் இறந்து போற மாதிரி சீன் வரும். அதை கூட நான் ரொம்ப நாகரிகமா தான் சொல்லி இருப்பேன்.

படம் ஃபர்ஸ்ட் காப்பிக்கு அப்புறம் குட் லக் தியேட்டர்ல அஜீத் சாரும் படம் பார்க்க வந்திருந்தார். நான் கதை சொல்றப்போ எப்படி விழுந்து விழுந்து சிரிச்சாரோ, அதே மாதிரி தான் அன்னைக்கு படம் பார்த்தபோதும்.

'நீ வருவாய் என 2' கதை ரெடி பண்ணிட்டிருக்கேன். நடிக்க ரெடி என்றால் அஜீத் சாரே நடிக்கட்டும். ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஒரு சீன் பண்ணித்தர அவரை கேட்பேன். நடிகைகள் தேவையானி, சுபலட்சுமி. இனியா ராஜகுமாரன் தான் கதாநாயகி. இரண்டு இளம் கதாநாயகர்கள் கணேஷ் விக்ரமன், நடிகர் விஜய் மகன் சஞ்சய். தேவையானி தான் மொத்த கதையுமே நகர்த்தி செல்லுவார்.

'நீ வருவாய் என' படத்துல முதல்ல விஜய் சாரிடம் தான் கேட்டு இருந்தோம். ஆனால் அவர் நடிக்காததுனால தான் பார்த்திபன் சார் நடிச்சிருந்தார். அதனால இந்த கதையை சொல்லி நீங்கதான் நடிக்க வரல உங்க பையனயாச்சும் நடிக்க வைங்க என்று விஜய்கிட்ட கேட்பேன்.