Quentin Tarantino timepass
சினிமா

The Movie Critic : இதுதான் Quentin Tarantino இயக்கும் கடைசி படமா? | Hollywood

அடுத்ததாக குவென்டின் டாரன்டினோ திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைம்பாஸ் அட்மின்

பிரபல ஹாலிவுட் இயக்குநரான குவென்டின் டாரன்டினோவுக்கு (Quentin Tarantino) உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இதுவரை இயக்கிய பத்து படங்களுமே சினிமா ரசிகர்களின் பட்டியலில் இருக்கும்.

இவர் கடைசியாக 'ஒன்ஸ் அப்பான் எ டைம் என் ஹாலிவுட்' என்ற படத்தை 2019 ஆம் ஆண்டு வெளியிட்டார். தன் வாழ்நாளில் 10 படங்களை மட்டுமே இயக்குவேன் என டாரன்டினோ கூறியிருந்ததார்.

இந்நிலையில், அடுத்ததாக குவென்டின் டாரன்டினோ திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'The Movie Critic' எனப் பெயரிப்பட்டுள்ளது. 1970களில் வாழ்ந்த Pauline Kael என்ற சினிமா விமர்சகரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.