சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

சமீபத்தில் ரிலீஸாகியிருக்கும் எமோஷனல் படத்தின் ஹீரோ 'காமெடி' நடிகர் பண்ணும் அலும்பு தாங்கவில்லையாம்.
சினிமா கிசுகிசு
சினிமா கிசுகிசுடைம்பாஸ்

ப்ளீஸ்... இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க! 

சமீபத்தில் ரிலீஸாகியிருக்கும் எமோஷனல் படத்தின் ஹீரோ 'காமெடி' நடிகர் பண்ணும் அலும்பு தாங்கவில்லையாம். வெளியில் வெள்ளந்தியாக, சிம்பிளாக வளையவரும் அவர் பண்ணும் ஒரு விஷயம் தான் அடேங்கப்பா ரகம் என நம் காதைக் கடிக்கிறார்கள்!

தனக்கான சம்பளத்தைத் தாண்டி உதவியாளர்களுக்கான தனி பேட்டா காசையும் கறாராக தயாரிப்பு தரப்பில் பேசி வாங்கிவிடுகிறார் என்கிறார்கள். 

'பரவாயில்லையே தன்னைப்போல தன் அசிஸ்டெண்ட்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாரே!' -என்று நினைக்கிறீர்களா..? 

இங்கேதான் ட்விஸ்ட்டே... தன் உதவியாளர்கள் மூன்று அல்லது நான்கு பேர் என அழைத்து வந்து ஷூட்டிங்கில் தலைக்கு 3,000 என கணக்குப்போட்டு மொத்தமாக நாளொன்றுக்கு 12,000 ரூபாயை  பேட்டாவாக புரொடக்‌ஷன் தரப்பிலிருந்து அவரே கைப்பட வாங்கிக் கொள்கிறாராம். 

அதிலிருந்து உதவியாளர்களுக்கு பேட்டாவாக ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் மட்டுமே தருகிறாராம். அவரிடம் கடந்த ஆறுமாதமாக உதவியாளராக இருந்தவர் சொன்ன ஒப்புதல் வாக்கு மூலம் இது. 

'நான்லாம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்! ப்ளடி ராஸ்கல் நோகாம நோம்பி கும்பிடப் பார்க்குறீங்களா?' என கிண்டல் வேறு அடிக்கிறாராம்!  

நல்ல யோகக்காரர் தான் போல!  

-  கிசுகிசு கிச்சா.

சினிமா கிசுகிசு
'காம்பவுண்ட் சுவரால் பாலியல் புகாரில் சிக்கிய VIP' - நான் நிருபன் | Epi 14

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com